உங்கள் தலைமுடி பொலிவிழந்து அசிங்கமாக உள்ளதா? அதோடு நரைமுடியும் உங்கள் தலைமுடியின் அழகைக் கெடுக்கிறதா? இந்த பிரச்சனைகளுக்கு கடைகளில் விற்கப்படும் தலைமுடி பராமரிப்பு பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுக்க நினைக்கிறீர்களா?
ஆனால் அப்படி கண்ட கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு தலைமுடியைப் பராமரிப்பதற்கு பதிலாக, நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பராமரித்தாலே போதும். இங்கு தலைமுடியின் பொலிவை அதிகரிக்கும் மற்றும் தலையில் உள்ள நரைமுடியைப் போக்கும் சில ஹேர் மாஸ்க்குகள்
பொலிவான மற்றும் பட்டுப் போன்ற தலைமுடியைப் பெற…. தேவையானபொருட்கள்: முட்டை வெள்ளைக்கரு -1 ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும், மிக்ஸியில் போட்டு அனைத்தையும் அரைத்து. ஸ்கால்ப்பில் தடவி 30-40 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு வெவவெதுப்பான நீரில் அலச வேண்டும். இதனால் தலைமுடி பட்டுப் போன்று மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.
நரைமுடியைப் போக்க… தேவையான பொருட்கள்: ஹேர் கண்டடிஷனர் – 2 டேபிள் ஸ்பூன் பட்டைத் தூள் – 4 டேபிள் ஸ்பூன் தேன்- 3 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து, பின் அதனை ஈரமான தலைமுடி மற்றும் ஸ்கால்ப் மற்றும் தலைடியின் நீளத்திற்குத் தடவி, பிளாஸ்டிக் கவர் பயன்படுத்தி, தலையைச் சுற்றி, 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி தினமும் பின்பற்றி வந்தால், தலைமுடி ஆரோக்கியத்துடனும், நரைமுடி நீங்கியும் காணப்படும்.