28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
201610221142307078 Keerai Dhal Masiyal paruppu keerai kadaiyal SECVPF
சைவம்

சுவையான சத்தான பாசிப்பருப்புக்கீரை கடையல்

தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. பாசிப்பருப்புக்கீரை கடையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பருப்புக் கீரை – 1 கட்டு
பாசிப்பருப்பு – 1/4 கப்
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 4 பல்
தக்காளி – 1 (பெரியது)
மிளகாய் வற்றல் – 4
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

* கீரையை (கூட்டு செய்யக் கூடிய ஏதாவது ஒரு கீரை) சுத்தம் செய்து கொள்ளவும்.

* பாதி தக்காளியை பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக வெட்டவும்.

* குக்கரில் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.

* அடுத்து கீரை, பாதி தக்காளி, பாதி வெங்காயம், பூண்டு, அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து 1/4 டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்து ஆறியதும், மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

* தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.

* மிளகாய் தூள் வாசம் மாறியதும் வேக வைத்த பருப்பையும், கீரை, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

* சுவையான பாசிப்பருப்புக்கீரை கடையல் தயார்.

* சாதத்தில் பிசைந்தும், பக்க உணவாகவும் சாப்பிடலாம்.201610221142307078 Keerai Dhal Masiyal paruppu keerai kadaiyal SECVPF

Related posts

சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி

nathan

செய்வது எப்படி உருளைக்கிழங்கு கார குழம்பு

nathan

மோர்க் குழம்பு

nathan

முளைகட்டிய பயிறு அகத்திக்கீரை சுண்டல்

nathan

சோயா உருண்டை குழம்பு

nathan

வாழைக்காய் சட்னி

nathan

மொச்சை பொரியல் செய்வது எப்படி

nathan

உருளைக்கிழங்கு ரெய்தா

nathan

சப்பாத்திக்கு சூப்பர் சைட் டிஷ் பாலக்கீரை தால்

nathan