28.9 C
Chennai
Saturday, Feb 22, 2025
201704061513348206 Mushroom potato fry. L styvpf
சைவம்

காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை

அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். இன்று காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை
தேவையான பொருட்கள்:

காளான் – 2 கப்
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1 கப்
கிராம்பு – 2
பூண்டு – 2
எண்ணெய் – தேவைக்கு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பூண்டை தண்டி வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகு தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு வேகும் அளவு சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

* 10 நிமிடம் ஆன பின்பு அத்துடன் காளானை போட்டு கிளறி, மூடி வைத்து 8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* காளான் மற்றும் உருளைக்கிழங்கானது நன்கு வெந்ததும், அதில் உப்பு, கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும்.

* சுவையான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை ரெடி!!!201704061513348206 Mushroom potato fry. L styvpf

Related posts

வீட்டிலேயே செய்யலாம் கோவில் புளியோதரை

nathan

முருங்கைப்பூ பொரியல் செய்ய…!

nathan

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு

nathan

பட்டாணி பன்னீர் கிரேவி

nathan

குழந்தைகளுக்கு சத்து நிறைந்த கேரட் சப்பாத்தி

nathan

வரகரிசி தக்காளி சாதம்

nathan

விதவிதமான காளான் உணவுகளை தயார்செய்வது எவ்வாறு?

nathan

சூப்பரான வெண்டைக்காய் ஸ்டஃப்டு வறுவல்

nathan

வெண்டைக்காய் – ஓமம் மோர்க் குழம்பு

nathan