26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

கரும்புள்ளிகள், மச்சங்கள், கரும்படலங்கள் – வித்தியாசம் தெரியுமா?

00000பெரும்பாலான, “பியூட்டி பார்லர்’களுக்குச் சென்றால், “உங்கள் முகத்தில், “பிளாக் ஹெட்’ அதிகமாக உள்ளது. நீக்கித் தரட்டுமா? “பேஷியல்’ செய்து கொள்ளுங்களேன்…’ என, தொல்லை செய்வர்.உங்கள் முகத்தில் இருப்பது, நிஜமாகவே கரும்புள்ளி தானா என்பது தெரியுமா உங்களுக்கு? மச்சத்தைக் கரும்புள்ளி என்று கூறி விட முடியுமா?

கரும்புள்ளி என்றால், முகத்தின் மேல் தோலில், நிறத்தைக் கொடுக்கும் நிறமி செல்கள் ஒரு இடத்தில் குவிந்து காணப்படும். வெயிலின் தாக்கத்தை தோல் தாங்கிக் கொள்ளும் வகையில், இந்த செல்கள் சில இடங்களில் குவிந்து விடும். வெயிலில் அதிகம் சுற்றும்போது, இது போன்று கரும்புள்ளிகள் ஏற்படும்.

ஆனால், மச்சங்கள் அப்படி அல்ல. உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும், மச்சங்கள் தோன்றலாம். இதற்கு வெயிலைக் காரணம் கூற முடியாது. சில நிறமி செல்கள் ஒரே இடத்தில் தானாகவே குவிவதால், இது போன்று மச்சங்கள் ஏற்படுகின்றன. மச்சத்தில் பல வகைகள் உள்ளன. பெரும்பாலும் கருமை நிறத்தில் மச்சங்கள் தோன்றும். சிலருக்கு அடர் பிரவுன் நிறத்திலும், சிவப்பு நிறத்திலும் மச்சங்கள் தோன்றலாம். கரும்படலங்கள் அல்லது பிரவுன் நிற புள்ளிகள், வெயிலால் மட்டுமே ஏற்படுபவை. பரம்பரை காரணமும் இதற்கு உண்டு. முகத்திலும், கைகளிலும் இது தோன்றும்.

வெளிர் நிறத் தோலுடையவர்களிடம் இது அதிகம் காணப்படும். எனவே, “பார்லரில்’ உங்களிடம், அது, இது எனக் கூறி ஏமாற்றினால், ஏமாந்து விடாதீர்கள். உங்களுக்கு என்ன பிரச்னை என்பதை நீங்களே ஆராய்ந்து, சந்தேகம் இருந்தால், தோல் நோய் நிபுணரிடம் கேட்டுத் தெரிந்து, அவர் ஆலோசனை பேரிலேயே, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

Related posts

சரும பள பளப்பிற்கான -சித்த மருந்துகள்

nathan

வாடகைத்தாய் சர்ச்சை விவகாரம்..விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் பதிவு!

nathan

குளிர்காலத்தில் சரும அழகை மேம்படுத்த ஆயுர்வேதம் கூறும் சில குறிப்புகள்!

nathan

உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

கருப்பா இருக்குறேன்னு ஃபீல் பண்றீங்களா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க

nathan

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகள் நீங்க!

nathan

என்னென்ன பொருள்களை ஷேவிங் கிரீமுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம் !..

sangika

தக. தக. தக்காளி! பள. பள. மேனி

nathan

சூப்பர் டிப்ஸ்.. கை, கால் மரத்து போவதற்கான காரணங்கள்

nathan