எங்கெங்க! சுழற்றி அடிக்கும் சமூக வாழ்க்கை, குடும்ப பொறுப்புகள் மற்றும் சோதனை தரும் வேலை அல்லது தொழில் பொறுப்புகளுக்கு மத்தியில அழகுக்கு எது நேரம்? அப்படினு நெனைக்கிறவரா நீங்க இருந்தா இந்த தலைப்பு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
அழகைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாமல் இருக்கவேண்டியதில்லை அன்பான பெண்களே ! நீங்கள் வேலைக்காக வீட்டை விட்டு வெளியில் எந்த மேக்கப்பும் இல்லாமல் செல்லும் முன் கொஞ்சம் இதை படிங்க. தங்களை கவனித்துக் கொள்ள முடியாத பரபரப்பான பெண்களுக்காக இதோ சில அற்புதமான மிக எளிய அழகுக்கு குறிப்புகள்.
நாம் இந்த பிஸியான பெண்களுக்கான அழகுக்குறிப்புகளை பார்க்கும் முன் சில விஷயங்களை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். அவை என்னெவென்று பார்ப்போமா?..
நெயில் பாலிஷை உடனே காயவைக்க நெயில் பாலிஷ் போட்டால் காய அதிக நேரமெடுக்கிறதா? இதோ உங்களுக்காக ஒரு சட்டென்ற குறிப்பு. பாலிஷ் போட்ட விரல்களை ஐஸ் தண்ணீரில் சில நொடிகள் நனைத்து வைத்தால் இதோ நொடியில் காய்ந்துவிடும். பிசிறு இல்லை காத்திருக்க நேரமும் தேவையில்லை இல்லை.
தலை முடி வாசனையுடன் இருக்க : இரண்டு மூன்று நாட்கள் தலையை அலசவில்லையா? இத ட்ரை பண்ணுங்களேன்? உங்களுக்குத் பிடித்த பெர்பியும் கொஞ்சம் சீப்பில் தெளித்து தலையை எல்லாப்பக்கமும் சீவுங்கள். இது உங்கள் முடியை புத்துணர்வாக்குவது மட்டுமல்ல நறுமனமுடனும் வைத்திருக்கும்.
புருவங்களை கச்சிதமாக்க ஐடி கார்டு: ஆமாங்க இது ரொம்ப சுலபம். உங்க ஐடி கார்டை உங்கள் கண்களின் நுனியில் இரு புருவங்களுக்கு மத்தியில் சமநிலையில் வைத்து உங்கள் ஐ லைனரை தீட்டினால் கச்சிதமான புருவங்கள் கிடைக்கும். எந்த பிசிறும் இல்லாமல் உங்கள் ஐ லைனரும் சுத்தமாக, துல்லியமாகவும் கூர்மையாகவும் வல்லுனரைப் போல் தெரியும்.
நாள் பூராவும் நீடிக்கும் லிப்ஸ்டிக் : உங்கள் வழக்கமான லிப்ஸ்டிக்கை போடுங்கள். அதன் மேல் டிஷ்யூ பேப்பரை வைத்து மெல்ல அழுத்தி எடுத்து பின்னர் உதடுகளின் மேல் சிறிது பவுடர் போட்டு மெல்ல பூசுங்கள். சில வினாடிகளுக்குப் பின் இந்த பவுடர் உதட்டு துவாரங்களை மூடி உங்கள் லிப்ஸ்டிக் மழமழவென்று நாள் பூராவும் நீடித்திருக்கும்.
பவுண்டேஷனை சரி செய்யுங்கள் : நீங்கள் வாங்கி வைத்துள்ள பவுண்டேஷன் உங்கள் சருமத்திற்கு சற்று கருமையாக உங்களை காட்டுகிறதா? கவலையில்லை. சில துளிகள் மாயிஸ்ச்சரைசரை போட்டு அதை சற்று மென்மையாக்குங்கள்.
குதிகால் வெடிப்புகளுக்கு டாட்டா : பெட்ரோலியம் ஜெல்லியும் விக்ஸ்சும் சம அளவில் எடுத்துக் கொண்டு அதை பாதிக்கப்பட்ட இடங்களில் தேய்த்துவிடுங்கள். அதன் மேல் ஒரு நல்ல ஜோடி சாக்ஸை அணிந்து கொண்டு காலையில் பார்த்தால் உங்கள் கால்கள் மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். முழுதும் குணமாகும் வரை தினமும் இதை செய்துவாருங்கள்.
அக்குள் வாடையை பற்றிய பயம் இனி இல்லை : அக்குள் வாடையை போக்க உங்களுக்கு வேதிப்பொருட்களால் ஆன டியோடரன்டுகளை பயன்படுத்த மனமில்லையா? ஒரு பிரச்சனையும் இல்லை. அந்த பகுதியில் சமையல் சோடாவை போட்டு தடவி விடுங்கள். இது அங்கு இருக்கும் வியர்வை அமிலங்களை நீர்த்துப் போகச்செய்து வாடையைப் போக்கும்.
புருவங்களை சீராக்குங்கள் உங்கள் கண் மை அல்லது மேக்கப் பொருட்கள் புருவத்தை கடினமாக்கி விட்டதா? உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஒரு பல் துலக்கும் பிரஷ் மட்டும்தான். உங்கள் புருவத்தில் இந்த பிரஷை மெல்ல தேய்த்து விடுங்கள். இது புருவத்தை சீராக்கும்.
புருவத்தை அடர்த்தியாக்குங்கள் : மெல்லிய புருவங்களை அடர்த்தியாக்க கூர்மையாக்க கண்ணிற்கு மேக்கப் போடும் முன் இந்த குறிப்பை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் புருவத்தை அவ்வப்போது பேபி பவுடர் போட்டு பராமரியுங்கள். இது புருவத்தை அடர்த்தியாகவும் நீளமாகவும் காட்டும்.
கரு வளையங்களை ஒரு குட் பை : பயன்படுத்திய க்ரீன் டீ பைகள் இரண்டை எடுத்துக் கொண்டு அதை சில நிமிடம் பிரீஸரில் வையுங்கள். பின்னர் அவற்றை உங்கள் தன்மீது வைத்து குளிர்ச்சி போகும்வரை காத்திருங்கள். இதில் குவிந்துகிடக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் உங்கள் கருவளையங்களை நிறம் மாறச்செய்வதுடன், கண் வீக்கத்தை குறைத்து கண்களை அழகாக்கும். கண்ணிற்கு கீழ் வரும் கருவளையத்தினை நீக்கும் இந்த வழிமுறையை தினமும் செய்தால் ஆச்சரியப் படத்தக்க பழங்கள் கிடைக்கும். உங்களுக்கு இதுபோன்ற பிஸியான பெண்களுக்கான அழகுக்குறிப்புகள் தெரிந்திருந்தால் இங்கே கமெண்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்களேன் !