27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
1473489447 6505
சிற்றுண்டி வகைகள்

ஜீரண சுரப்பிகளின் செயலை அதிகரிக்க செய்யும் இஞ்சி துவையல்

தேவையானப் பொருட்கள்:

இஞ்சி – 1/2 கப் (தோல்சீவி நறுக்கியது)
தேங்காய் துருவல் – 1/2 கப்
காய்ந்த மிளகாய் – 1
உளுத்தம்பருப்பு – 11/2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – 4 ஈர்க்கு
பெருங்காயம் – சிறிதளவு
புளி – சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

இஞ்சியைத் தோல்சீவி நன்றாகக் கழுவி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்து மேலும் சிறிதுநேரம் பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.

தேங்காயைத் துருவல், புளி, பச்சை மிளகாயைக் கலந்து ஆற வைக்கவும். ஆறியதும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக நீர்தெளித்து கெட்டியாக கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.

காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இஞ்சி கறிவேப்பிலையை தனியாக வதக்கி, தேங்காய்த் துருவல் புளி, உப்பு, வறுத்ததிலிருந்து காய்ந்தமிளகாய் மட்டும் சேர்த்து மிக்ஸியில் வைத்து கரகரப்பாக அரைத்து கடைசியில் வறுத்த உளுத்தம் பருப்பையும் வைத்து ஒன்றிரண்டாக அரைபடுமாறு அரைத்து எடுத்தால் சுவையாக இருக்கும்.

இந்தத் துவையலில் நல்லெண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிப்பது நல்லது என்று மருத்துவ உணவுக் குறிப்பு சொல்கிறது. விரும்பினால் அரை டீஸ்பூன் கடலைப் பருப்பு அல்லது துவரம் பருப்பும் சேர்த்து வறுத்துக் கொள்ளலாம்.

குறிப்பு:

துவையலை நீண்ட நேரம் வைத்திருக்கும்போது தேங்காயை நன்கு வதக்கி அரைக்கவும். சீக்கிரம் கெடாது.1473489447 6505

Related posts

கேழ்வரகு இனிப்பு புட்டு செய்வது எப்படி

nathan

பட்டர் கோழி சாண்ட்விச்

nathan

பிட்டு

nathan

தினை சோமாஸ்

nathan

கம்பு இட்லி

nathan

பச்சை பாசிப்பருப்பு சீயம்

nathan

எளிமையாக செய்யக்கூடிய புல்கா ரொட்டி

nathan

டொமட்டோ பிரெட்

nathan

ஜெல்லி பர்பி

nathan