23 1479878885 2 lips
உதடு பராமரிப்பு

உங்க உதடு கருப்பா அசிங்கமா இருக்கா? 10 நிமிடத்தில் அத போக்க இதோ ஓர் வழி!

உதடுகளும் ஒருவரின் அழகை வெளிக்காட்டும். அதனால் தான் பெண்கள் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். ஆனால் உதடுகளின் அழகை இயற்கையாகவே அதிகரிக்கலாம்.

பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும். இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன், புகைப்பிடித்தல் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன. இங்கு உதடுகளில் உள்ள கருமையைப் போக்கி, உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள அற்புத வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்கரப் செய்ய தேவையான பொருட்கள்: எலுமிச்சை சாறு – 1 கப் சர்க்கரை – சிறிது

தயாரிக்கும் முறை: எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

எவ்வளவு நாட்கள் செய்ய வேண்டும்? இந்த செயலை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், 5-6 நாட்களிலேயே உதடுகளில் உள்ள கருமை நீங்கி, உதடுகள் மென்மையாகவும், அழகாகவும் இருப்பதைக் காணலாம்.

இதர வழிகள்… டிப்ஸ் #1 கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் முன் உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருமை நீங்கி, உதடுகளின் அழகு அதிகரிக்கும்.

டிப்ஸ் #2 பீட்ரூட்டை துண்டுகளாக்கி ஃப்ரிட்ஜில் வைத்து, பின் குளிர்ச்சியான அந்த பீட்ரூட் துண்டுகளைக் கொண்டு உதடுகளை 2 நிமிடங்கள் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்தாலும், உதடுகளில் உள்ள கருமை அகலும்.
23 1479878885 2 lips

Related posts

லி‌ப்‌ஸ்டி‌க் வா‌ங்கு‌‌ம் போது

nathan

உங்கள் முகம் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும் உதடுகள் வறண்டு இருந்தால் அதற்கு சிறப்பான தீர்வு!

sangika

குளிர்காலத்தில் உதடுகளை பாதுகாப்பதற்கான வழிகள்

nathan

dark lips Natural Cure..உதடு கருப்பாக உள்ளதா?

nathan

பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன….

sangika

பளபள உதடுகள் பெற.

nathan

லிப்ஸ்டிக் இதுவரை தெரியாத ஆச்சர்யங்கள்

nathan

வீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா?

nathan

வறட்சியடைந்து சொரசொரவென்று இருக்கும் உதடுகளை சரிசெய்ய டிப்ஸ்

nathan