35.7 C
Chennai
Tuesday, Jul 15, 2025
23 1479892536 shampoo salt
தலைமுடி சிகிச்சை

ஷாம்புவுடன் உப்பு சேர்த்து குளித்தால், மிகப்பெரிய தலைமுடி பிரச்சனை நீங்கும் என தெரியுமா?

இன்றைய காலத்தில் உப்பு சாப்பாட்டில் சேர்ப்பதற்கு பதிலாக இதர பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. அதற்கு ஏற்ப உப்பும் நம் அழகு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது. குறிப்பாக உப்பு நாம் சந்திக்கும் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் என்றால் பாருங்கள்.

இங்கு நாம் சந்திக்கும் அழகு பிரச்சனைகளுக்கு உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து காண்போம்.

ஷாம்புவுடன் உப்பு தலையில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், அதனைப் போக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஷாம்பு பாட்டிலில் 2-3 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் அதனை தலைக்கு பயன்படுத்த வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை முழுமையாக நீங்கும். கீழே உப்பின் இதரை அழகு நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உப்பு பாடி ஸ்கரப் 1/2 கப் தேங்காய் எண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் கல் உப்பை சேர்த்து கலந்து, பின் அதனைக் கொண்டு உடலை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் அழகாகவும், பொலிவோடும் இருக்கும்.

பாத ஸ்கரப் பாதங்களில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, குதிகால் வெடிப்பைப் போக்க, ஆலிவ் ஆயில் மற்றும் உப்பை சரிசம அளவில் எடுத்து கலந்து, பாதங்களில் தடவி மென்மையாக தேய்த்து ஊற வைத்து பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, பாதங்களில் உள்ள வறட்சி மற்றும் குதிகால் வெடிப்பு போன்றவை முற்றிலும் மறைந்துவிடும்.

வெட்டு காயங்கள் வெட்டு காயங்களில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் விரைவில் குணமாக, 2 டீஸ்பூன் உப்பை ஒரு டம்ளர் நீரில் கலந்து, வெட்டு காயங்களின் மீது ஊற்ற வேண்டும். இதனால் ஆரம்பத்தில் சற்று எரிச்சலுடனும், நமைச்சலுடனும் இருக்கும். இப்படி செய்தால், மருந்து வேலை செய்கிறது என்று அர்த்தம்.

நாள்பட்ட தலைவலி தொடர்ச்சியான நாள்பட்ட தலைவலியால் அவஸ்தைப்பட்டு வந்தால், ஒரு டம்ளர் நீரில் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து குடிக்க, 10-15 நிமிடங்களில் தாங்க முடியாத தலைவலியும் குணமாகும்.

23 1479892536 shampoo salt

Related posts

எப்போது முடி நரைக்க தொடங்கும்

nathan

ஆரோக்கியமாக கூந்தல் வளர இயற்கையான முறையில் எப்படி ஷாம்பு தயாரிக்கலாம்?

nathan

மென்மையானக் கூந்தலைப் பெற

nathan

தாங்க முடியாத பொடுகுத் தொல்லை! இதோ அற்புதமான எளிய தீர்வு…

nathan

பளபளப்பான நீண்ட கூந்தலை பெற இந்த விதையை உபயோகித்திருக்கிறீர்களா? உபயோகமான ரெசிபி!!

nathan

இதோ எளிய நிவாரணம்! முடி உதிர்வை கட்டுப்படுத்தி தலைமுடி வளர்ச்சியை தூண்டும் அற்புதமான பொடி!!!!

nathan

கூந்தல் வளர்க்கும் 10 உணவுகள்

nathan

கூந்தல் நீளமாக வளர உதவும், அதிசய மூலிகை எண்ணெய்கள்!

nathan

முடி உதிர்தல், பொடுகு செய்ய வேண்டியவைகள்

nathan