7ZezKgh
சிற்றுண்டி வகைகள்

இனிப்புச்சீடை

என்னென்ன தேவை?

அரிசி மாவு, கம்பு மாவு,
சிறுதானிய கலந்த மாவு – அனைத்தும் கலந்தது – 2-1/2 கப்,
வறுத்து அரைத்த உளுத்த மாவு – 1/2 கப்,
சுத்தமாக துருவிய பாகுவெல்லம் – 1 கப்,
நைஸாக துருவிய தேங்காய் – சிறிது,
ஏலக்காய்த்தூள் – சிறிது,
பொரிக்க எண்ணெய் – தேவைக்கு,
நெய் – 1 டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

அனைத்து மாவையும் 2 முறை சலித்து உப்பு சேர்க்கவும். வெல்லத்தை கரைத்து வடித்து, அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக சலித்த மாவுக் கலவையுடன் சேர்க்கவும். தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து முறுக்கு மாவு போல் பிசைந்து உருட்டவும். உருட்டும்போது உடையக்கூடாது. சிறிய உருண்டைகளாக உருட்டி கொண்டு, ஈரத்துணி போட்டு மூடி வைக்கவும். எண்ணெயை காயவைத்து கொஞ்சம் கொஞ்சமாக பொரித்தெடுக்கவும். ஆறவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் வைத்து படைத்து பரிமாறவும்.7ZezKgh

Related posts

சில்லி சப்பாத்தி / Chilli Chapathi

nathan

தேங்காய் ரொட்டி

nathan

புத்துணர்ச்சி தரும் முள்ளங்கி டோஸ்ட்

nathan

சீனி பணியாரம்

nathan

குழந்தைகளுக்கான சில்லி கார்லிக் நூடுல்ஸ்

nathan

ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

சந்தேஷ்

nathan

குழந்தைகளுக்கு பிடித்தமான சீஸ் ஸ்டிக்ஸ்

nathan

வறுத்தரைக்கும் துவையல்-தேங்காய்த் துவையல்!

nathan