26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்கண்கள் பராமரிப்பு

கவர்ந்திழுக்கும் கண்கள்…

eyes_thumbநம் முகத்திலேயே பளிச்சென்று, பார்ப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் முதல் விஷயமே கண்கள்தான். ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்களை, நம்மில் பலர் சரியாகப் பராமரிப்பதில்லை.

அதனால்தான், நாம் எவ்வளவு அழகாக மேக்கப் போட்டாலும், கண்கள் சோர்வாகத் தெரிந்தால் முக அழகே அடிபட்டு விடுகிறது.

சில சமயங்களில் கண்கள் உப்பி விடுவதற்கும், அல்லது சிவந்து போவதற்கும் என்ன காரணம்?

* கம்ப்யூட்டர் அல்லது புத்தகங்கள் போன்ற நுணுக்கமான விஷயங்களை அதிக நேரம் பயன்படுத்துவது.

* சரியான தூக்கம் இல்லாததும்தான் காரணம்

சரி, இதைத் தவிர கண்களில் வரும் பொதுவான பிரச்னைகள் என்னென்ன?

பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை கண்களுக்குக் கீழே ஏற்படும் கருவளையம் தான். கண்களுக்கு அடியில் பை போல் சதை தொங்குவதும் மற்றொரு பிரச்னை.

எதனால் இந்த மாதிரியான பிரச்னைகள் வருகின்றன?

டென்ஷனான வாழ்க்கை முறை கருவளையம் ஏற்பட முக்கியக் காரணம். நல்ல சரிவிகித உணவு சாப்பிடாதது, தூக்கமின்மை, தண்ணீர் சரியாக குடிக்காததும் மற்ற காரணங்கள்.

தவிர… சைனஸ் பிரச்சனைகள், தண்ணீரால் ஏற்படும் இன்பெஃக்ஷன், சைனஸ், ஆஸ்துமா, அலர்ஜி, போன்றவற்றால்கூட, கண்கள் உப்பிப் போவது மற்றும் கண்களுக்கு அடியில் பை போன்று தொங்கும் பிரச்னைகள் வரலாம். சிலருக்குப் பரம்பரையாகக்கூட, இந்தப் பிரச்னைகள் ஏற்படலாம்!

சரி இதை எப்படிப் போக்குவது?

* இன்ஸ்டண்ட் டீ பேக்குகள் (ஈரமானவை) அல்லது ஈர டீஸ்பூனை ஃபீரிஸருக்குள் போட்டு வைத்து, அதைக் கண்களில் சில நிமிடங்களுக்கு வைத்திருந்தால் ரத்தக்குழாய்கள் சீராகி, கண்கள் உப்பியிருக்கும் நிலை மாறி சீராகி விடும்!

* குளிரூட்டப்பட்ட பாலில் இரண்டு காட்டன் பஞ்சுகளை நனைத்து கண் இமைகளின் மேல் பத்து நிமிடங்கள் வைக்கலாம்.

* குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, உருளைக்கிழங்கு துண்டுகளை இமைகளின் மேல் வைத்து, பத்து நிமிடங்களுக்கு ரிலாக்ஸ் செய்யலாம்.

* கண்கள் உப்பலாக இருக்கும் நேரங்களில் சாதாரணமாக முகத்துக்குப் போடும் மாய்ஸ்சுரைஸர்களை கண்ணைச் சுற்றிப் போட பயன்படுத்தக் கூடாது. இது இவற்றை அதிகப்படுத்தி விடும். அந்தநேரம் தரமான ஐகேர் புராடக்ட்களை(Product) பயன்படுத்துங்கள். நார்மலாக இப்படிப் பயன்படுத்துவது நல்லது.

* சாப்பாட்டில் உப்பின் அளவைக் குறைத்தாலே கண்களில் ஏற்படும் உப்புசம் குறைந்து விடும்.

* ஃபிரஷான பாதாம்பருப்பை பாலில் ஊற வைத்து அரைத்து, அதோடு எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி தொடர்ந்து போட்டு (படுத்த நிலையில்) “பேக்” காயும் முன்பே குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவி வந்தால் கண்களில் ஏற்படும் கருவளையம் போய்விடும்.

* கண்கள் உப்பி இருக்கும் நாட்களில் தலைக்குக் கூடுதலாக ஒரு தலையணை வைத்துப் படுங்கள். இது உப்புசம் தரும் கண் திரவங்கள் சுரப்பதைத் தடுத்து, கண்கள் நார்மலுக்கு வர உதவும்!

கண்களை எப்படிப் பராமரிக்க வேண்டும்?

* கண்களே, மிகவும் மெல்லிய பாகங்கள். அதனால் கண்களைக் கழுவும்போது, கண்களைச் சுற்றிய பகுதிகளை, அழுத்தித் தேய்க்காமல் மெதுவாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். அழுத்தித் தேய்த்தால், அதிக சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும்.

* மிகவும் முக்கியான விஷயம் என்னவென்றால் கண்ணில் போடுகிற மேக்கப்பை, படுக்கச் செல்லும் முன் கலைத்து விட வேண்டும்.

* அதே போல் கண்ணுக்குத் தரமான கண்மை பயன்படுத்த வேண்டும்.

கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களுக்குக் சீக்கிரம் கருவளையம் விழுகிறதே? கண்களை எப்படிப் பராமரிப்பது?

நுணுக்கமான வேலையை தொடர்ந்து பல மணி நேரங்கள் செய்வதால் இப்படி ஏற்படலாம்.

இருபது நிமிடங்கள் சேர்ந்தாற் போல் கம்ப்யூட்டரில் வேலை பார்த்தால் ஒரு பத்து நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்.

கண்களை அகல விரித்து பின் பத்து இருபது முறை கண்களைச் சிமிட்டுங்கள். அல்லது தூரத்திலிருக்கும் பசுமையான காட்சிகளை பார்த்தபடி கண்களை சிமிட்டினால், கண்கள் புத்துணர்ச்சி அடையும்….

கருவளையத்தைப் போக்க வீட்டிலேயே செய்யக் கூடிய ஈஸி பேக்குகள் ஆல்மண்ட் க்ரீம்

தேவையான பொருட்கள்: பாதாம் எண்ணெய் 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்

செய்முறை: பாதாம் எண்ணெயையும், எலுமிச்சை சாறையும் நன்கு கலந்து, பின் கண்களைச் சுற்றி மிருதுவாகத் தடவவும்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கண்களை கவனமாகக் கழுவவும். (கண்ணை அழுத்தித் தேய்க்கக் கூடாது)

பொட்டேட்டோ பேக்

தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு சாறு 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்

செய்முறை: இந்த இரண்டு சாறையும் நன்கு கலந்து, பஞ்சில் ஒற்றி அதை கண் இமைகளின் மேல் சிறிது நேரம் வைத்திருக்கவும்.

Related posts

முகப்பருவினால் ஏற்படும் கரும் புள்ளிகள் மற்றும் கரும்திட்டுகள், சரும வறட்சி நீங்கி சருமம் பட்டுப்போல் ஒளிர மஞ்சள் ஃபேஷ் பேக்…

nathan

சூப்பர் டிப்ஸ்.. பிளாக் ஹெட்ஸை போக்கும் வழிமுறைகள்…!

nathan

தெரிஞ்சிக்கங்க…ரெண்டுங்கெட்டான் வயதில் குழந்தைகளிடம் பெற்றோர் கூறக்கூடாத 7 விஷயங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த மூலிகை இருக்கும் திசையில் கூட எந்தவித விஷ ஜந்துக்களும் அண்டாது?

nathan

சூப்பர் டிப்ஸ் உங்களுக்கு எண்ணெய் சருமமா அப்போ ரோஜா பூவை இப்படி மிஸ்ட்டா மாற்றி யூஸ் பண்ணுங்க.

nathan

உடல் எடையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த குறிப்பை பயன்படுத்தினால் போதும்!…

sangika

இதை ஆரோக்கியத்துக்குரியதாகவும் தேர்வு செய்வது அவசியம்…….

sangika

அடேங்கப்பா! மொட்டை ராஜேந்திரனின் மனைவி யாருன்னு தெரியுமா ??

nathan

பெப்பர் சிக்கன்

nathan