நம்முடைய முன்னோர்களின் வலுவான மற்றும் ஆரோக்கியமான கேசம் மற்றும் உச்சந்தலைக்கு என்ன காரணம்? வேறு என்ன. அவர்கள் அடிக்கடி வெந்தயத்தை உச்சந்தலையில் பூசி தலைக்கு குளித்ததுதான். அதன் காரணமாக அவர்களின் கேசம் பளபளப்பாக மாறியதுடன் அவர்கள் பொடுகுத் தொல்லையில் இருந்தும் விடுபட்டார்கள்.
வெந்தயத்தை தினசரி உபயோகிப்பது கடினமல்ல. இதைப் பயன்ப்டுத்தி நீங்கள் மிக சுலபமாக முடி கொட்டுவது, முடி உதிர்வது, பொடுகு, உச்சந்தலை அரிப்பு போன்ற பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து சுலபமாக விடுபட்லாம். உங்களுக்கு முடி மற்றும் உச்சந்தலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகள் இருக்கலாம். அத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபட இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்
1. முடி உதிர்வதை தடுக்க முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு வெந்தயத்தை பசை போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறது எழுமிச்சை சாறு கலந்தபின் அவை இரண்டையும் நன்கு கலக்க வேண்டும்.
இப்பொழுது வெந்தய பசையை உச்சந்த தலையில் அழுத்தி தடவ வேண்டும். தலை முழுவதும் தடவிய பிறகு, சிறிது .நேரத்திற்கு நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.
சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த முறையை மாறி மாறி பின்பற்றி வர உங்களின் முடி உதிரும் பிரச்சனை தீர்ந்து உங்களின் கூந்தல் மிகவும் அழகாக மாறி விடும்.
2. முடி வளர்ச்சிக்கு : ஒரு உள்ளங்கை நிறைய வெந்தயத்தை எடுத்து அதை ஒரு கிண்ணத்தில் உள்ள தேங்காய் எண்ணெய் உடன் கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பிறகு கிண்ணத்தை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்க வேண்டும். வெந்தயம் சிவப்பு நிறமாக மாறும் வரை சூடாக்க வேண்டும்.
சூடு ஆறும் வரை காத்திருந்து கலவையை மிக்ஸியில் போட்டு நன்கு பசை போன்று அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்தக் கலவையை உச்சந்தலையில் அழுத்தி தடவ வேண்டும்.
சிறிது நேரம் பொறுமையாக காத்திருந்து விட்டு, வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த முறையை அடிக்கடி பின்பற்ற உங்களின் முடி வளரத் தொடங்
3. உச்சந்தலை அரிப்பை போக்க : முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறு நாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும்.
அதன் பின்னர் அந்த பசையுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை கலக்க வேண்டும்.
உங்களால் முட்டையின் வாடையை பொருக்க முடியாது எனில் அதனுடன் எழுமிச்சை சாறு சேர்த்து கலவையை நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் நன்கு அழுத்தி தடவ வேண்டும்.
அதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து விட்டு, வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.
காத்திருக்கும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் உங்களின் தலையில் நீங்கள் தடவிய முட்டை உருகி வழிந்து உங்களின் உடையை பாழாக்கி விடும்.
4. பொடுகைப் போக்க முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறு நாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும்.
அதன் பின்னர் அந்த பசையுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் முடியின் வேர் வரை படரும் படி தடவ வேண்டும்.
அதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பின்னர் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வர உங்களின் பொடுகுத் தொல்லை குறைந்து உச்சந்தலை அரிப்பு அறவே நீங்கி விடும்.
5. நுனி முடி பிளப்பதை தடுக்க : முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறு நாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதனுடன் சிறிது அளவு ரோஜா நீர் மற்றும் மயோனைசே சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
அதன் பின் இந்தக் கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவ வேண்டும். மேழும் உங்களின் பிளவு பட்ட முடி மீது இதை கண்டிப்பாக தடவ வேண்டும். சிறிது .நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க உங்களின் முடிப் பிளவு பிரச்சனை தீர்ந்து விடும்.
பிசுபிசுப்பான கூந்தலுக்கு : சிறிது வெந்தயத்தை எடுத்து அதை ஆப்பிள் சாறு வினிகரில் ஊற வைக்க வேண்டும். இப்போது, இந்த இரண்டு பொருட்களின் கலவையை நன்கு அரைத்து பசை போல் மாற்ற வேண்டும்.
இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் நன்கு அழுத்தி தடவ வேண்டும். சுமார் 30 முதல் 40 நிமிடங்கள் வரை காத்திருந்து விட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வர உங்களின் எண்ணெய் வழியும் பிரச்சனை சீராகி விடும்.