29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201703301504531563 Side Dish Aloo Manchurian potato Manchurian SECVPF
சைவம்

குழந்தைகளுக்கான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன்

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

குழந்தைகளுக்கான சைடு டிஷ் ஆலு மஞ்சூரியன்
தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு – 3,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு,
தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
வெங்காயத்தாள் – சிறிதளவு
சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் – 2 டீஸ்பூன்,
பச்சரிசி மாவு – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

மஞ்சூரியன் கிரேவிக்கு:

கறிவேப்பிலை – சிறிது,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – சிறிதளவு.


செய்முறை:

* சின்ன வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி அரைவேக்காடு பதத்துக்கு வேகவைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், பச்சரிசி மாவுடன் மிளகுத்தூள், உப்பு, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மாவாகக் கரைக்கவும்.

* இந்த மாவில் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து நன்கு புரட்டி சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்துப் புரட்டவும்.

* அடுத்து வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு புரட்டி வதக்கவும்.

* கடைசியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கிளறி இறக்கவும்.

* சூப்பரான ஆலு மஞ்சூரியன் ரெடி.201703301504531563 Side Dish Aloo Manchurian potato Manchurian SECVPF

Related posts

கேரளா பருப்பு குழம்பு

nathan

உருளைக்கிழங்கு மோர் குழம்பு

nathan

சூப்பரான பாலக் வெஜிடபிள் கிரேவி

nathan

மெக்சிகன் ரைஸ்

nathan

சுவையான சத்தான வெங்காயத்தாள் பொரியல்

nathan

கறிவேப்பிலை சாதம்

nathan

ஐயங்கார் புளியோதரை

nathan

மிளகு மோர்க்குழம்பு

nathan

சூப்பரான சுரைக்காய் சப்ஜி

nathan