25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
hairgrowth 19 1479537178
தலைமுடி சிகிச்சை

2 வாரத்தில் தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க இந்த ஹேர் மாஸ்க்கை போடுங்க…

கேரட் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, தலைமுடியின் வளர்ச்சிக்கும் தான் உதவும். அதற்கு கேரட்டை தினமும் சாப்பிடுவதுடன், அதனை அவ்வப்போது தலைமுடிக்கு பயன்படுத்தவும் வேண்டும்.

கேரட்டில் வைட்டமின்களான ஏ, கே மற்றும் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது. இது பாதிக்கப்பட்ட மயிர்கால்களை சரிசெய்வதோடு, புதிய மயிர்கால்களின் வளர்ச்சியையும் மேம்படுத்தும். மேலும் இதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி, இரத்த ஓட்டத்தைத் தூண்டி, மயிர்கால்களை வலிமைப்படுத்தி, தலைமுடி உதிர்வதையும், உடைவதையும் தடுக்கும்.

இங்கு தலைமுடியின் வளர்ச்சியையும், அடர்த்தியையும் அதிகரிக்க கேரட்டைக் கொண்டு எப்படி மாஸ்க் போடுவது என்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டெப் #1 ஒரு அவகேடோ பழத்தை எடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அவகேடோவில் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது.

ஸ்டெப் #2 ஒரு கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் முடியின் நீளத்திற்கு ஏற்ப, கேரட்டை பயன்படுத்தி சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் #3 ஒரு பௌலில் கேரட் ஜூஸ், அவகேடோ பேஸ்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, சிறிது தயிர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட் மிகவும் கெட்டியாகவோ அல்லது நீர்மமாகவே இல்லாமல் நடுநிலையான அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #4 பின் அத்துடன் சிறிது ரோஸ்மேரி ஆயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் ரோஸ்மேரி ஆயிலில் உள்ள பண்புகள் ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்து, தலைமுடியின் ஆரோக்கியத்தைத் தூண்டும்.

ஸ்டெப் #5 பின்பு சீப்பால் தலைமுடியை சீவி, தலைமுடியில் உள்ள சிக்குகளை நீக்க வேண்டும்.

ஸ்டெப் #6 பின் பிரஷ் பயன்படுத்தி, தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

ஸ்டெப் #7 ஒரு மணிநேரம் கழித்து, தலைமுடியை மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு போட்டு வந்தால், தலைமுடி நன்கு வளர்வதைக் காணலாம்.

hairgrowth 19 1479537178

Related posts

பிசுபிசுப்பான கூந்தலுக்கான காரணமும் தீர்வுகளையும் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

nathan

நரை முடியை கருமையாக மாற்ற இயற்கையான ஹேர் டை !!

nathan

வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்க பத்து டிப்ஸ்

nathan

கூந்தலில் இருந்து துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க சில டிப்ஸ் –

nathan

முடிகளை கருமை நிறமாக மாற்ற உதவும் எளிய டிப்ஸ்!

nathan

அழகுக் கூந்தலுக்கு தூயத் தேங்காய் எண்ணெய்

nathan

முடி ரொம்ப வறண்டு இருக்குதா?அப்ப இத யூஸ் பண்ணுங்க…

nathan

தலைமுடியை‌ப் பாதுகா‌க்க

nathan

தலை முடியின் பராமரிப்புகள்

nathan