24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அசைவ வகைகள்

தந்தூரி சிக்கன்,அசைவம், அசைவம், அறுசுவை, தந்தூரி சிக்கன்

 

tandoori-chicken,தந்தூரி சிக்கன்

ஹேட்டலில் சாப்பிடும் தந்தூரி சிக்கன் மிகவும் சுவையாக இருந்தாலும் அங்கு செய்யப்படும் முறையை நினைத்து நம் மனம் ஒதுங்க நினைத்தாலும் நம் நாக்கு மறுக்கிறது, அதற்க்காக ஒரே எண்ணெயை திரும்ப திரும்ப பயன்படுத்தி செய்யும் உணவை நாம் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் நிலை கெட்டுவிடும், அதற்க்காக நம் நாக்கை கட்டுப்படுத்த முடியுமா? முடியாது என்பதால் நம் வீட்டில் செய்து சாப்பிடலாம் சுவையாகவும் இருக்கும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ( 3 star ) ஹேட்டலில் வேலை செய்யும் எனது தோழியிடம் கேட்டு நான் செய்து ருசித்த பின் உங்களுக்காக சுவையான உணவை ஆரோக்கியமாக சாப்பிட இங்கு செய்முறை

 

தேவையான பொருட்கள்

 

கோழி தொடை        –  4

எண்ணெய்            – 1/2   லிட்டர்

ஜிலேபி பவுடர்        – சிறிது

மைதா மாவு          – 50 கிராம்

கடலை மாவு         – 50 கிராம்

சில்லி சிக்கன் பவுடர்  – 50 கிராம்

எலுமிச்சை பழம்      – 1

இஞ்சி,பூண்டு விழுது   – 2 ஸ்பூ ன்

உப்பு         – தேவையான அளவு 

முட்டை     –  1  (வெள்ளை கரு மட்டும்)

 

செய்முறை:-

 

  • கோழியை சுத்தம் செய்து அதில் கத்தியை வைத்து அங்கும் இங்கும் மாக சிறிது கீறல் போடவும்.(கறியில் மசாலா நன்கு சேர்வதற்க்காக)
  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கடலை மாவு, சில்லி சிக்கன் பவுடர், இஞ்சி,பூண்டு விழுது, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த கலவையில் எலுமிச்சை சாற்றை பிழிந்து அத்துடன் கலருக்காக சிறிது ஜிலேபி பவுடரையும் சேர்த்து அனைத்தும் ஒன்று சேர  நன்கு கலக்கவும்.
  • இந்த கலவையில் கறியை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்பு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றவும்.
  • எண்ணெய் நன்கு கொதிக்கும் போது கறியை அதில் போட்டு நன்கு வேக விடவும்.
  • கறி கோழி வேகும் போது திருப்பி திருப்பி போட வேண்டும்.
  • ( மிக மிக முக்கியம் ) அடுப்பு குறைந்த அளவு வெப்பத்தில் இருக்க வேண்டும்.
  • கறி  நன்கு வெந்து பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து விடவும்.    

tHuk3yCjBS0

Related posts

சுவையான மொகல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

nathan

சுவையான கல்மி கபாப்

nathan

சிக்கன் குருமா

nathan

செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ்

nathan

சூப்பரான சைடிஷ் சிக்கன் சுக்கா வறுவல்

nathan

பாதாம் சிக்கன்

nathan

வீட்டிலேயே செய்யக்கூடிய‌ சில்லி முட்டை.

nathan

சுவையான மசாலா முட்டை பன்னீர் புர்ஜி

nathan

சுவையான இறால் பிரியாணி

nathan