ldapp1569
சூப் வகைகள்

கொண்டைக்கடலை சூப்

என்னென்ன தேவை?

முளை கட்டிய கொண்டைக் கடலை – 1 கப்,
பொடியாக நறுக்கிய வெங்காயம்,
தக்காளி – தலா 1,
பூண்டு பல் – 2,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
மிளகுத்தூள்,
உப்பு – தேவைக்கு,
பால் – 100 மி.லி.

எப்படிச் செய்வது?

குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெயில் வெங்காயம், தக்காளி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அதில் கொண்டைக்கடலை, உப்பு சேர்த்து வதக்கி 4 கப் தண்ணீர் விட்டு மூடவும். 6 முதல் 7 விசில் வந்த பிறகு எடுத்து ஆற வைக்கவும். பிறகு மிக்சியில் நன்கு அரைத்து தேவையான நீர் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது கெட்டியானவுடன் பால் விட்டு உடன் அடுப்பை அணைக்கவும். மிளகுத்தூள் தூவி பரிமாறவும். குழந்தைகளுக்கு சாஸ் மற்றும் நெய்யில் பொரித்த பிரெட் துண்டுகளை போட்டு பரிமாறவும்.ldapp1569

Related posts

காய்கறி சூப்

nathan

தக்காளி பேசில் சூப்

nathan

ஓட்ஸ் சூப்

nathan

மிளகு ரசம்

nathan

பரங்கிக்காய் சூப்

nathan

மட்டன் சூப்

nathan

பாதாம் தேங்காய்ப்பால் கிரீம் சூப்

nathan

பசியை தூண்டும் மூலிகை சூப்

nathan

சுவையான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

nathan