24.2 C
Chennai
Tuesday, Dec 24, 2024
அழகு குறிப்புகள்

அழகை உடனே அதிகரித்து காட்ட வேண்டுமா, beauty tips in tamil

Nisha_Agarwal_8

மரபு ரீதியாக அல்லது உயர்தரமான ஆரோக்கியத்தால் சில பேருக்கு இயற்கையாகவே பளபளப்பான சருமம் இருக்கும். அப்படி இல்லாதவர்கள் கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லாதவர்களே. தெளிவான, ஆரோக்கியமான, பளபளப்பான சருமம் என்பது பார்ப்பதற்கு அழகையும் ஸ்டைலையும் அதிகரிக்கும். உங்கள் சருமம் உடனடியாக பளபளப்புடன் இருக்க வேண்டுமானால், அதனை சில வழிமுறைகளால் நீங்கள் அடைந்திடலாம். அழகை அதிகரிக்க மணிக்கணக்காக உங்கள் நேரத்தை செலவு செய்யத் தேவையில்லை. அழகை உடனடியாக மெருகேற்ற கீழ்கூறியவைகளை பின்பற்றினால், கண்கள் வீக்கம், எண்ணெய் பசையுள்ள கூந்தல் மற்றும் கதிர்வீச்சு சருமம் போன்ற பொதுவான பிரச்சனைகளை சரி செய்யலாம். உங்கள் முகத்தை ஒளிஊட்டுங்கள் உங்கள் தோற்றம் அழகாக

இருப்பதற்காக நீங்கள் எடுக்கும் சிறந்த முயற்சிகளில் ஒன்று தான், முகத்திற்கு ஒளி ஊட்டுதல். அதற்கு, சிறிதளவு மாய்ஸ்சரைஸரை வைத்து உங்கள் கண்களை ஈரப்பதமாக்குங்கள். இதனால் கண்களை சுற்றியுள்ள பகுதி வறண்டு காணப்படாது. அதன் பின் மஞ்சள் நிறத்தொனியை கொண்ட, லேசான பிரதிபலிப்பை உண்டாக்கும் கன்சீலரை பயன்படுத்துங்கள். இது கண்களுக்கு கீழ் இருக்கு ஊதா குறிகளை மறைத்து விடும். கன்சீலர் தடவிய பிறகு, எப்போதும் செய்யக்கூடிய ஒப்பனையை தொடங்கலாம். முடியை கண்டிஷன் செய்யுங்கள் உங்கள் கூந்தல் வறண்டு, அசிங்கமாக உள்ளதா? கவலையை விடுங்கள். உங்கள் அழகை மெருகேற்ற ஒரு கூந்தலை நல்ல முறையில் கண்டிஷன் செய்தால் போதும்; பார்ப்பதற்கு மென்மையாகவும் வழுவழுப்பாகவும் இருக்கும். கூந்தலுக்கு ஷாம்பூ போட்டு அலசிய பிறகு, கண்டிஷனரை பயன்படுத்தினால், கூந்தல் மின்னப்போவது உறுதி. கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருங்கள் உங்கள் அழகை உடனடியாக மெருகேற்ற, கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது, மற்றொரு டிப்ஸாக விளங்குகிறது. உங்கள் உள்ளங்கை மென்மையாக, நல்ல நறுமணத்தோடு இருந்தால், உங்கள் மனநிலையை அது ஊக்குவிக்கும். பொதுவாக மற்றவர்களின் கவனம் நம் மேல் முதலில் விழும் பகுதிகளில், நம் கைகளும் ஒன்றாகும். அதனால் அதனை அக்கறையுடன் கவனித்துக் கொள்வது முக்கியமாகும். லிப் க்ரீம் தடவுங்கள் லிப் பாம் அல்லது லிப் க்ரீமை தடவிக் கொண்டால், உங்கள் உதடுகளுக்கு கூடுதல் கவர்ச்சியை அது உண்டாக்கும். லிப் பாம் பயன்படுத்துவதற்கு முன்னாள், கன்சீலரை பயன்படுத்தி அந்த பகுதியை மென்மையாக மாற்றிக்கொள்ளுங்கள். சீரான உடற்பயிற்சி மேக் அப் செய்வது உங்கள் முகத்தை பளிச்சென செய்து அழகாக காட்டுவதை போல, சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து உங்கள் முகத்தில் பொலிவை உண்டாக்கும். டார்க் சாக்லெட் உண்ணுங்கள் ஆச்சரியமாக உள்ளதா? ஆம், டார்க் சாக்லெட்கள், உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு அதிசயங்களை உண்டாக்கும். மேலும் நீங்கள் மன ரீதியாக சோர்வுடன் இருக்கிறீர்கள் என்றால், அது உங்கள் முகத்திற்கு உடனடி பொலிவை அளித்து, உங்களை மன ரீதியாகவும் அமைதிப்படுத்தும்.

Related posts

கூந்தல் நீளமாக, அடர்த்தியாக, பட்டுப் போன்ற மென்மையுடன் இருக்க,

nathan

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?

sangika

தெரிஞ்சிக்கங்க…குடிக்கிற தண்ணியில இந்த பொடிய கொஞ்சம் கலந்து குடிச்சா போதும்! எவ்ளோ வெயிட்டா இருந்தாலும் குறையும்

nathan

கற்றாழை முகத்தை பொலிவை தருவதோடு இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது.

nathan

சரணடையும் இராணுவ வீரர்கள்… பலர் தப்பி ஓட்டம்: திகைக்க வைக்கும் உக்ரைன்

nathan

பெண்களே! ஹேர் ஷேவ் பண்ணும் போது இந்த தப்பு பண்ணாதீங்க!!!

nathan

கரும்புள்ளிகளை வீட்டிலேயே நீக்கலாமே

nathan

சரும சுருக்கத்தை போக்கும் மஞ்சள்

nathan

பொலிவான சருமத்தை எளிதில் பெற – Ingredients for a clear skin

nathan