துளசி இலைகள் உடலில் உள்ள பிரச்சனைகளைப் போக்க மட்டுமின்றி, சரும பிரச்சனைகளைப் போக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. துளசியை வைத்து ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சரும பிரச்சனைகளை போக்கும் துளசி ஃபேஸ் பேக்
துளசி இலைகள் உடலில் உள்ள பிரச்சனைகளைப் போக்க மட்டுமின்றி, சரும பிரச்சனைகளைப் போக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. இதற்கு அதில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மைகள் தான் முக்கிய காரணம். இதனால் பருக்கள், கரும்புள்ளிகள், கருமையான தழும்புகள் போன்றவை எளிதில் மறையும்.
துளசியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போட்டால், சரும பிரச்சனைகள் நீங்கும் என்று பார்க்கலாம்.
ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இறுதியில் ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுங்கள். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சரும நிறத்தை அதிகரிக்க உதவும்.
சிறிது துளசி இலைகளை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் காணாமல் போய்விடும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள பருக்களைப் போக்குவதோடு, இனிமேல் பருக்கள் வராமலும் தடுக்கும்.
10-12 துளசி இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, நீர் ஊற்றி, 5 நிமிடம் நன்கு கொதித்த பின் இறக்கி, குளிர வைத்து, பின் முகத்தைக் கழுவுங்கள். இப்படி செய்வதன் மூலம், சருமம் நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்கும்.
ஒரு கையளவு புதினா மற்றும் துளசி இலைகளை எடுத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சரும செல்கள் புத்துணர்ச்சி அடைத்து, முகம் பிரகாசமாக இருக்கும்.