27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
dandruff 15 1479188223
தலைமுடி சிகிச்சை

உண்மையிலேயே மௌத் வாஷ் பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை அளிக்குமா?

தலைமுடி உதிர்வதற்கு பொடுகுத் தொல்லையும் ஒரு காரணம். ஒருமுறை ஒருவருக்கு பொடுகு வந்தால், அது அவ்வளவு சீக்கிரம் போகாது. எனவே முடிந்த வரை பொடுகு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பொடுகைப் போக்க எத்தனையோ இயற்கை வழிகள் உள்ளன. அதில் நம் வீட்டில் இருக்கும் மௌத் வாஷ் கொண்டும் பொடுகை எளிதில் போக்கலாம்.

மௌத் வாஷில் ஆல்கஹால் இருக்கும். இது ஸ்கால்ப்பில் உள்ள ஈஸ்ட் தொற்றுக்களை உடைத்தெறிந்து, ஸ்கால்ப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளும். மௌத் வாஷை தலைக்கு பயன்படுத்தும் முன் ஒருசிலவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நினைவில் கொள்ள வேண்டியவை * ஸ்கால்ப்பானது சென்சிடிவ் சருமம் அல்லது வறட்சியான சருமமாக இருந்தால், இந்த முறையைப் பின்பற்ற வேண்டாம். ஏனெனில் இது நிலைமையை மோசமாக்கும். * மௌத் வாஷை வாங்கும் போது, அதில் ப்ளேவர்கள் ஏதும் இல்லாதவாறு இருக்க வேண்டும். * மௌத் வாஷை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தும் முன், சிறு இடத்தில் அதனை சோதித்துப் பார்த்து பின்பே பயன்படுத்த வேண்டும். இப்போது பொடுகைப் போக்க மௌத் வாஷை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

ஸ்டெப் #1 பாதி கப் மௌத் வாஷை எடுத்துக் கொண்டு, அதற்கு சம அளவில் பேபி ஆயிலையும் எடுத்து, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2 தலைமுடியை ஷாம்பு போட்டு அலசிக் கொள்ள வேண்டும். பின் கண்டிஷனரை தலைமுடியின் முனைகளில் தடவிக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #3 பின்பு ஸ்ப்ரே பாட்டிலில் உள்ள கலவையை ஸ்கால்ப்பில் ஸ்ப்ரே செய்து கொள்ள வேண்டும். அப்படி ஸ்ப்ரே செய்யும் போது, முடியின் முனைகளில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் முடி வெடிப்புக்கள் ஏற்படும்.

ஸ்டெப் #4 பிறகு ஸ்கால்ப்பை 2-5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இறந்த செல்களின் படலம் உடைத்தெறியப்படும். பின் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

ஸ்டெப் #5 அடுத்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். அதுவும் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

மாற்று வழி மௌத் வாஷை ஷாம்புவுடன் சேர்த்து கலந்தும், தலைமுடிக்கு பயன்படுத்தலாம். ஆனால் அளவாகத் தான் மௌத் வாஷைப் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தலைமுடி பாதிக்கப்படும்.

dandruff 15 1479188223

Related posts

கூந்தலுக்கு அழகுடன் வைத்துகொள்ள வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

nathan

இளநரையை போக்கும் சீயக்காய்

nathan

முடி அடர்த்தியாக வளர……இய‌ற்கை வைத்தியம்

nathan

வாரம் ஒருமுறை தலைக்கு கறிவேப்பிலை வெந்தயம் மாஸ்க் போட்டால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

பொடுகு தொல்லை நீங்க சில வழிகள்.

nathan

படுக்கும் முன் கூந்தலை எப்படி பராமரிக்க வேண்டும்?

nathan

நரை முடி கருக்க tips

nathan

கற்றாழை ஜெல்லைக் கொண்டு பொடுகை விரட்டுவது எப்படி?

nathan

கூந்தல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு

nathan