முடி உதிர்தல் பருவ காலத்திற்கு ஏற்ப குறையும் அதிகரிக்கும். குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலத்தில் சருமத்தில் ஈரப்பதம் குறைந்து வறட்சியை உண்டாக்கும்.
முடி உதிர்தல் சாதரண பிரச்சனையென்ராலும் எளிதில் தீர்க்கப்படாதது. கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கவும்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் இங்கே அருமையான சில ரெசிப்பிகள் கொடுக்கப்பட்டுள்ளது. முயற்சித்துப் பாருங்கள்.
வாழைப்பழ ஹேர் மாஸ்க் : வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இயற்கை எண்ணெய், விட்டமின் உங்கள் ஸ்கால்ப்பிற்கு போஷாக்கு அளித்து ஈரப்பதத்தை அளிக்கும்.
தேவையானவை : பழுத்த வாழைப் பழம் – 2 ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் தேன் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை : வாழைப்பழத்தை நன்றாக மசித்து எல்லாவற்றையும் நன்றாக கலந்து அதனுடன் சிறிது பாதாம் எண்ணெயும் சேர்த்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். மைல்டான ஷாம்பு போடவும்.
விளக்கெண்ணெய் மற்றும் பிராந்தி மாஸ்க் : தேவையானவை : விளக்கெண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் பிராந்தி – 2 டேபிள் ஸ்பூன் முட்டை – 1
செய்முறை : முட்டையை அடித்து அதனுடன் விளக்கெண்ணெய் பிராந்தியை கலந்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும்.
முட்டை மற்றும் பால் மாஸ்க் : முட்டை – 1 பால் – 1 கப் எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை : முட்டையுடன் மற்ற பொருட்களை கலந்து தலையில் தடவுங்கள். இதமாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து தலையை அலசவும்.