23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
p18b
சரும பராமரிப்பு

அன்றாட வாழ்க்கையில், அழகு… ஆரோக்கியம்!

தினமும் வீட்டில் செய்து கொள்ளக்கூடிய, செய்துகொள்ள வேண்டிய அழகு, ஆரோக்கியத் துக்கான விஷயங்களைச் சொல் கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர், டாக்டர் கருணாநிதி.

குளித்து முடித்ததும் சூரிய வெப்பம் படக்கூடிய கை போன்ற பகுதிகளில் எண்ணெய் தடவியதும் வெளியே சென்றால், சூரிய கதிர்வீச்சால் சருமம் பாதிக்கப்படாது.

வெளியே சென்று வந்ததும் குளிர்ந்த நீரில் முகம், கை – கால்களைக் கழுவவும். பாத்ரூமுக்கு சென்றுவந்த பிறகும், சாப்பிடும் முன்பும் நிச்சயமாகக் கை கழுவவும்.

நம் நாட்டின் வெப்பமான சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப இறுக்க மான ஆடைகளைத் தவிர்க்கவும்; காட்டன் ஆடைகளை அணியவும்.

10 அடி இடைவெளியில் டி.வி பார்க்கவும். தொடர்ந்து டி.வி, கணினி, ஸ்மார்ட்போன் பார்க்க நேரிட்டால், இடையிடையே சிறிது நேரம் கண்களை மூடி ஓய்வு கொடுப் பது, கண் எரிச்சலைத் தடுக்கும்.

பசிக்கு மட்டும் சாப்பிடவும். உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்கவும் [உயரம் (செ.மீ) – 100 என்பதே சரியான எடை. உதாரண மாக, உயரம் 155 செ.மீ எனில், 55 கிலோ என்பதே உடலுக்கேற்ற எடை]. திடீரென உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும். அதற்காக 1 கிலோ, 2 கிலோ குறைந்தாலோ கூடினாலோ பதற தேவையில்லை.

மதிய உணவுக்குப் பிறகு அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தூங்கலாம். இரவில் 6-8 மணி நேரத் தூக்கம் அவசியம்.

p18b

வருடத்துக்கு ஒருமுறை மருத் துவப் பரிசோதனை முக்கியம். உட லில் வழக்கத்துக்கு மாறாக என்ன மாற்றம் தென்பட்டாலும் மருத்துவ ஆலோசனை பெறவும்.

சத்தான சரிவிகித உணவுகளும் தினசரி உடற்பயிற்சிகளும் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை.

பட்டுப்போன்ற சருமத்துக்கு!

அன்றாட சரும பராமரிப்புக்கான ஆலோசனைகளைச் சொல்கிறார், சென்னை, தோல் மருத்துவ மைய இயக்குநர் டாக்டர் முருகுசுந்தரம்.

பி.ஹெச் அளவு 5.5 – 6 வரை உள்ள சோப்பு, ஷாம்புவை பயன் படுத்தவும்.

ஸ்கால்ப்பில் (உச்சந்தலை) இருந்து முடியின் ஒரு இன்ச் வரை இயற்கையாகவே எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால், ஸ்கால்ப்பில் எண்ணெய் வைக்கத் தேவையில்லை. முடிக்கு மட்டும் தடவலாம்.

p18c

சீபம் என்னும் எண்ணெய்ப் படலம் தலையில் இருப்பதால் எளிதாக அழுக்குகள் சேர வாய்ப்புள்ளது. மேலும், ஹெல்மட் அணிபவர்களுக்கு வியர்வை மற்றும் அழுக்குகள் அதிகமாக கேசத்தில் சேரும் என்பதால் அவர்கள் தினமும் தலை குளிப்பது நல்லது. தலையில் அழுக்கு சேராமல் பார்த்துக்கொண்டாலே, முடிக்கு எந்த பாதிப்பும் இருக்காது, கேச வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.

நம் முகத்தில் எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால், பலரின் முகத்தில் எண்ணெய் பிசுபிசுத்தன்மை இருக்கும். அவற்றை சிலர் தவறாக நினைத்துக்கொண்டு, பியூட்டி பார்லர் சென்று முகத்தை ட்ரை ஸ்கின்னாக (உலர் சருமம்) மாற்றுவார்கள். அது மிகவும் தவறு. தூசு, சூரிய கதிர்வீச்சு போன்ற பாதிப்புகளில் இருந்து நம் முகத்தை பாதுகாக்கும் எண்ணெய் படலத்தை முற்றிலும் நீக்காமல், அடிக்கடி குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தாலே போதும்.

சரும வறட்சி உள்ளவர்கள் அவ்வப்போது எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். எண்ணெய்க் குளியலுக் கும் உடல் சூடு குறைவதற்கும் சம்பந்தம் இல்லை. மேலும், கண் மற்றும் காதுகளில் எண்ணெய் விடுவது மிகவும் தவறான செயலாகும்.

பாதங்களில் வெடிப்பு, புண் ஏற்படுவதைத் தடுக்க, அடிக்கடி உள்ளங்கால்களை கழுவி பின்னர் பழைய டூத் பிரஷ்ஷை கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். பிறகு வெதுவெதுப்பான வெந்நீரில் அரை மணி நேரம் உள்ளங்கால்களை ஊறவைத்து சோப்பால் சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் காலை துடைத்த பின் காலணிகளை அணிந்துகொள்ளலாம். ஹை ஹீல்ஸ், இறுக்கமான செருப்புகளை அணிவது தீங்கு விளைவிக்கும். வெளியே சென்று வீடு திரும்பியதும் அனைவரும் கட்டாயம் நன்றாக கால்களைக் கழுவ வேண்டும்.

p18d

லிப்ஸ்டிக் மற்றும் லிப் பாம்களில் ரசாயனங்கள் கலந்திருப் பதால், தொடர்ந்து பயன்படுத்தினால் பின்னாளில் ஒவ்வாமை ஏற்பட்டு, இதழ்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெடிப்பு, நிறம் மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே, அவற்றைத் தவிர்த்து வாசலின் அல்லது தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவலாம்.

நெயில் பாலிஷ், நெயில் பாலிஷ் ரிமூவர் போன்றவற்றை தொடர்ச்சியாகப் பயன்படுத்தினாலும் பின்னாளில் நகங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

காயம் ஏற்பட்டால் மஞ்சள்தூள், காபித்தூள், மூக்குப்பொடி போன்ற எதையும் வைக்கக்கூடாது. அடிபட்ட இடத்தை உடனடியாக சோப்பால் நன்றாகக் கழுவி, ஆன்டிபயோடிக் க்ரீம் அப்ளைசெய்து, மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லவும்.

p18e
தீக்காயங்கள் ஏற்பட்டால் உடனடியாகக் குளிர்ந்த நீர் உள்ள கலன்களில் தீக்காயம்பட்ட பகுதி மூழ்கியிருக்குமாறு வைக்கலாம். அல்லது தீக்காயம் பட்ட இடத்தில் குளிர்ந்த நீர்விடலாம். கம்பளியைப் போர்த்தி தரையில் உருட்டுவது, மை (இங்க்) ஊற்றுவது, தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் தேய்ப்பது போன்றவையெல்லாம் கூடவே கூடாது.

வாசனை திரவியங்களை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தா மல், ஆடைகளில் அப்ளை செய்து கொள்ளலாம்.

சருமம் மிகவும் வறட்சிகண்டால், தோல் நோய்கள் எளிதாக ஏற்பட வழிவகுக்கும். எனவே, அதில் கவனமாக இருப்பதுடன், அது ஏதாவது ஊட்டச்சத்துக் குறைபாட்டின் விளைவா என்று மருத்துவ ஆலோசனை பெறவும்.

Related posts

உங்க சருமத்தைப் பொலிவாக்க முல்தானிமட்டியை எப்படியெல்லாம் பயன்படுத்துவது.?சூப்பர் டிப்ஸ்…

nathan

உடல் வனப்பாக..! டிப்ஸ்! அழகு குறிப்புகள்!!

nathan

வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே!

nathan

சரும நிறத்தை அதிகரிக்க இரவில் செய்ய வேண்டிய 15 அழகுக் குறிப்புகள்!!சூப்பர் டிப்ஸ்

nathan

அழகு சிகிச்சை அபாயங்களும் ஆச்சரியங்களும்!

nathan

தெரிஞ்சிக்கங்க…பெடிக்யூர் செய்ய அழகு நிலையம் அவசியம் இல்லை; இதை செய்தாலே போதும்…!!

nathan

வாழைப்பழ தோல் எப்படி உங்கள் சருமத்திற்கு நிறம் அளிக்கும்?

nathan

உங்கள் சருமம் என்றும் 16 ஆக ஜொலிக்க அவகாடோவை பயன்படுத்தும் வழிகள் தெரியுமா!!

nathan

டாட்டூஸ் ஆபத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

nathan