23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
201703170859129403 green chili curry recipe SECVPF
சைவம்

காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு

லருக்கு அதிக காரமான உணவுகளை சாப்பிட மிகவும் பிடிக்கும். இப்போது காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.

காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு
தேவையான பொருள்கள் :

பச்சை மிளகாய் – 15
குட மிளகாய் – 1
சின்ன வெங்காயம் – 15
தக்காளி – 1
உளுந்தம் பருப்பு – அரை ஸ்பூன்
புளி – சிறிய உருண்டை
வெந்தயம் – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :


* பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

* வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.

* பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

* மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

* காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.

* இதை அனைத்து விதமான சாதத்தோடும் பரிமாற சுவையாக இருக்கும்.201703170859129403 green chili curry recipe SECVPF

Related posts

பேச்சுலர்களுக்கான… பருப்பு கடையல்

nathan

பாகற்காய் வறுவல்

nathan

தேங்காய்ப் பால் சாதம்

nathan

ஐயங்கார் புளியோதரை

nathan

மீல் மேக்கர் கிரேவி

nathan

சுவையான சத்தான அவகேடோ சப்பாத்தி

nathan

கார்லிக் பனீர்

nathan

பீட்ரூட் ரைஸ்

nathan

முருங்கைக்காய் கூட்டுச்சாறு

nathan