23.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024
201703161518302529 nuts cookies SECVPF
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான ஸ்நாக்ஸ் நட்ஸ் குக்கீஸ்

குழந்தைகளுக்கு குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் குக்கீஸ் செய்யலாம். இன்று நட்ஸ் வைத்து குக்கீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான ஸ்நாக்ஸ் நட்ஸ் குக்கீஸ்
தேவையான பொருட்கள் :

மைதா – 500 கிராம்,
டால்டா அல்லது வெண்ணெய் – 250 கிராம்,
சர்க்கரை பவுடர் – 250 கிராம்,
ஏலக்காய் – 2,
உப்பு – 1 சிட்டிகை,
பொடித்த நட்ஸ் – 1/2 கப்,
ஆப்ப சோடா – 1/4 டீஸ்பூன்.

செய்முறை :

* ஆப்ப சோடா, மைதாவை தனித்தனியா நன்றாக சலித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அதனுடன் டால்டா அல்லது வெண்ணெய் சேர்த்து நன்றாக தேய்த்து அடிக்கவும். மிருதுவாக வரும் வரை கைவிடாமல் அடிக்கவும்.

* இத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக சலித்த ஆப்ப சோடா, மைதா, ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.

* உதிரும் பக்குவத்தில் உப்பு சேர்க்கவும்.

* மீண்டும் நன்றாக கலந்து, பாதியளவு நட்ஸை சிறிது மைதா மாவில் கலந்து இந்தக் கலவையுடன் சேர்த்து, தேவையான வடிவில் உருட்டவும்.

* உருட்டியவற்றை குக்கீஸ் கப்புகளில் நிரப்பி அதற்கு மேல் மீதமுள்ள பொடித்த நட்ஸை தூவி அவனில் (150 முதல் 175°C) 15 முதல் 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

* டிரேயில் இடம் விட்டு அடுக்கியும் பேக் செய்யலாம். இது சூடாக இருக்கும் போது மெது மெதுவென்று இருக்கும். ஆற ஆற, மொறுமொறுவென ஆகிவிடும்.

* சூப்பரான நட்ஸ் குக்கீஸ் ரெடி.

* காற்று புகாத டப்பாவில் வைத்து 1 வாரம் வரை சாப்பிடலாம்.201703161518302529 nuts cookies SECVPF

Related posts

சுவையான… கீமா மொமோஸ்

nathan

ஓட்ஸ் குழி பணியாரம்

nathan

சுவையான சத்தான நெல்லிக்காய் துவையல்

nathan

மிளகு பட்டர் துக்கடா

nathan

கோதுமை ரவை வெஜிடபிள் புட்டு

nathan

பருப்பு போளி எப்படிச் செய்வது?

nathan

சுவையான வாழைப்பூவில் பக்கோடா

nathan

பாலக் டோஃபு

nathan

இந்த பனீர் பாப்கார்னை செய்து பாருங்கள்.

nathan