புளிச்சக்கீரையில் அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இன்று இந்த புளிச்சக்கீரையை வைத்து சுவையான கடையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
புளிச்சக்கீரை கடையல் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :
புளிச்சக்கீரை – 1 கட்டு,
பெரிய வெங்காயம் – 1,
பச்சைமிளகாய் – 4,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க :
கடுகு,
உளுந்தம்பருப்பு, சீரகம் – தலா 1/4 டீஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 4.
செய்முறை :
* வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொதிக்கும் நீரில் போட்டு வேகவைத்து நீரை வடித்து கடைந்து வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு. சீரகம், மிளகாய் வற்றம் போட்டு தாளித்த பின் பச்சைமிளகாய், வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் கடைந்து வைத்துள்ள புளிச்சக்கீரை, உப்பு சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
* இரும்புச் சத்து நிறைந்த இந்தக் கீரைக் கடையலை சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.