29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
201703141530496232 meal maker Mushroom Biryani SECVPF
சைவம்

சூப்பரான மீல் மேக்கர் – மஷ்ரூம் பிரியாணி

மீல் மேக்கருடன் மஷ்ரூம் சேர்த்து பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். செய்தும் எளிமையானது. இன்று இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

சூப்பரான மீல் மேக்கர் – மஷ்ரூம் பிரியாணி
தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – 1 1/4கப்
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
தக்காளி – 1
எண்ணெய் + நெய் – 4 டேபிள்ஸ்பூன்
பட்டன் மஷ்ரூம் – 200 கிராம்
மீல் மேக்கர் – 20 உருண்டைகள்
புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை – கொஞ்சம்
பிரியாணி மசாலா – 1 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்த்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

பொடிக்க :

இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 5பல்
பட்டை – 3 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
பிரியாணி இலை – 1

செய்முறை :

* அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.

* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

* மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் அலசி, தண்ணீரில்லாமல் பிழிந்து வைக்கவும்.

* பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.

* காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் காளான், மீல் மேக்கர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலா, தயிர், பொடித்த மசாலா, உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும்.

* குக்கரில் எண்ணெய்+நெய் ஊற்றி காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.

* தக்காளி நன்றா வதங்கியதும் ஊறவைத்த மஷ்ரூம் – மீல்மேக்கர் கலவை, மீதியிருக்கும் புதினா மற்றும் கறிவேப்பிலை புதினாவைச் சேர்த்து வதக்கவும்.

* வதக்கும்போது தீயை மிதமாக வைத்து குக்கரை (விசில் இல்லாமல்) மூடி வைத்து அவ்வப்பொழுது கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.

* அடுத்து அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பு அளவை சரிபார்த்து குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.

* சூப்பரான மீல் மேக்கர் – மஷ்ரூம் பிரியாணி ரெடி. 201703141530496232 meal maker Mushroom Biryani SECVPF

Related posts

உருளைக்கிழங்கு மோர் குழம்பு செய்வது எப்படி

nathan

வாழைக்காய் புட்டு ரெசிபி

nathan

சுவையான சத்தான வாழைப்பூ சப்பாத்தி

nathan

சூப்பரான துவரம் பருப்பு கடைசல்!

nathan

வெந்தயக்கீரை பருப்பு சப்ஜி

nathan

உடல் சூட்டை தணிக்கும் பழைய சாதம்

nathan

வேர்க்கடலை குழம்பு செய்வது எப்படி

nathan

சுவையான காளான் டிக்கா

nathan

தேங்காய்ப்பால் பேபி கார்ன் புலாவ்

nathan