28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
201703081106437760 vallarai keerai soup SECVPF
சூப் வகைகள்

சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப்

நியாபக சக்தியை அதிகரிக்கும் சக்தி கொண்டது வல்லாரைக்கீரை. இந்த கீரையை வைத்து குழந்தைகளுக்கு சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த வல்லாரை கீரை சூப்
தேவையான பொருட்கள் :

வல்லாரை கீரை – 1 கப்,
பாசிப்பருப்பு – 1 டீஸ்பூன்,
பூண்டு – 4,
சின்ன வெங்காயம் – 10,
மிளகு – சிறிது,
சீரகம் – சிறிது,
வெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பட்டை – 1,
லவங்கம் – 1.

செய்முறை :

* கீரை, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

* குக்கரில் 1 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்த பின் வெங்காயம், பூண்டை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் பருப்பு, கீரை சேர்த்து சிறிது வதக்கிய பின் 2 கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் போட்டு வேக வைக்கவும்.

* குக்கர் விசில் ஆறியதும் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டி கொள்ளவும்.

* வடிகட்டிய சூப்பை மீண்டும் அடுப்பில் வைத்து உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.

* சூப்பரான வல்லாரை கீரை சூப் ரெடி.

* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான இந்த வல்லாரை கீரை சூப் அருந்தலாம்.201703081106437760 vallarai keerai soup SECVPF

Related posts

சூப்பரான கொத்தமல்லி எலுமிச்சை சூப்

nathan

சுவையான மீன் சூப்

nathan

பாப்கார்ன் சூப்

nathan

தக்காளி பேசில் சூப்

nathan

சத்து நிறைந்த வேர்க்கடலைக் கூழ்

nathan

நாட்டுக்கோழி ரசம்

nathan

ஓட்ஸ் பீநட் பட்டர் சூப்

nathan

பானி பூரி சூப்

nathan

ஸ்வீட் கார்ன் பாதாம் சூப்

nathan