உங்கள் அழகு ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலில் வெளிப்படும். . வெளிப்பூசும் க்ரீம்களை விட உள்ளே போகும் உணவுகளில் முக்கியத்துவம் அளித்தால் என்றும் பதினாறாக உங்களால் ஜொலிக்க முடியும்.
உங்களின் சருமம் மற்றும் கூந்தல் இரண்டிற்கும் நீங்கள் சாப்பிடும் உணவினால் மெருகேற்ற முடியும். அவ்வாறு பெற இங்கே சொல்லப்பட்டிருக்கும் உணவுகளா முடியும். முயற்சி செய்து பாருங்கள்.
காலே : காலே கீரையில் அதிக விட்டமின் கே உள்ளது. இது சருமத்தை இறுகச் செய்யும். சுருக்கங்களை போக்கும். ஆலிவ் எண்ணெயில் காலே வைக்கொண்டு சமைத்து அல்லது பச்சையாகவும் சாப்பிடலாம். இதனை வாரம் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
சால்மன் மீன் : சாலமன் மீனில் உள்ள ஒமேகா உங்களுக்கு சுருக்கமில்லா இளமையான சருமத்தை தரும். தழும்புகளையும் மறையச் செய்யும். கூந்தல் அடர்த்தியாக வளர தேவையான அமினோ அமிலங்கள் இதில் இருக்கிறது.
தக்காளி : தக்காளியில் உள்ள விட்டமின் சி மற்றும் லைகோபீன் ஆகிய இரண்டும் உங்கள் சருமத்தை புற ஊதாக்கதிர்களிடமிருந்து பாதுகாக்கின்றது. அடிக்கடி உணவில் தக்காளியை சேர்த்துக் கொள்ள மறக்காதீர்கள்.
யோகார்ட் : யோகார்ட் கூந்தல் மற்றும் சருமத்திற்கு மிகச் சிறந்த உணவாகும், இது சருமத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றும். இதனை சாப்பிடவும் செய்யலாம். சருமம் மற்றும் கூந்தலிற்கு மாஸ்க் ஆகவும் பயன்படுத்தலாம். தினமும் அதனை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.
முட்டை : முட்டையில் ஜிங்க் அதிகம் உள்ளது. இந்த சத்து உங்கள் உடலின் செல்களை ரிப்பேர் செய்ய தேவை. இவை செல்களுக்கு புத்துணர்வையும் தருகிறது. அன்றாடம் நாட்டுக் கோழி முட்டையை சாப்பிடுங்கள். நீங்களே பலனை கண்டுகொள்வீர்கள்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு : சர்க்கரை வள்ளிக் கிழங்கு முதுமையை தடுக்கும். விட்டமின் சி அதிகம் இருக்கிறது. கொலாஜன் உற்பத்தியை பெருக்குகிறது
பாதாம் : பாதாம் சாப்பிடுவதால் அதிக விட்டமின் ஈ கிடைக்கும். அவை செல் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதனால் இளமையான சருமம் பெறுவீர்கள். சுற்றுபுற சூழ் நிலையால் உண்டாகும் கூந்தல் பாதிப்பிலிருந்து தடுக்கும்.