பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் ஆரோக்கியம் நிறைந்த கேரட் சேர்த்து செய்த சப்பாத்தியை கொடுக்கலாம். இப்போது இந்த சப்பாத்தியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு சத்து நிறைந்த கேரட் சப்பாத்தி
தேவையான பொருட்கள் :
கேரட் – இரண்டு
கோதுமை மாவு – கால் கிலோ
உப்பு – தேவைகேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
நெய் – இரண்டு டீஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
செய்முறை :
* கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நெய், துருவிய கேரட் சேர்த்து நன்றாக கலந்த பிறகு தண்ணிர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
* அரை மணி நேரம் கழித்து மாவை சப்பாத்திகளாக உருட்டி வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் உருட்டி வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* ஆரோக்கியமான கேரட் சப்பாத்தி ரெடி.