பேரீச்சம்பழங்களில் முகத்தில் உள்ள தீவிர சரும செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் பி5 சத்து அதிகம் காணப்படுவதால் அது சேதமடைந்த சரும செல்களை சீர் செய்து உங்கள் சருமத்தை நெகிழ்வுடன் வைக்கிறது.
இதில் அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை சருமத்தின் ஈரப்பதத்தை காத்து மென்மையாக, மிருதுவாக மற்றும் வலிமையுடன் வைக்கும்.
மேலும் பேரீச்சம் பழத்தில் காணப்படும் பான்டோதெனிக் அமிலம் சருமம் வயதாகும் வேகத்தைக் குறைத்து புதிய சரும செல்கள் மீண்டும் உருவாவதை ஊக்குவிக்கிறது.
இயற்கையான சிகப்பு பேரீச்சம்பழ மாஸ்கை முகத்தில் போடுவதன் மூலம் கருமை, மெல்லிய கோடுகள் மற்றும் சருமப் பொலிவில் நல்ல மாற்றங்களை கண்கூடாக காணமுடியும்.
எனினும், சருமத்தில் ஆழமான நீண்ட நாள் நீடிக்கக்கூடிய மாற்றத்தை நீங்கள் விரும்பினால் உங்கள் ஆகாரத்தில் தினமும் பேரீச்சம்பழத்தை சேர்த்துக் கொள்ளவும்.
பேரீச்சம்பழத்தை சருமத்தில் எப்படி பயன்படுத்துவது என்பதற்கான படிப்படியான செயல்முறைய அறிந்து கொள்ள மேலே படியுங்கள்.
1. முதலில் 3 முதல் ஐந்து பேரீச்சம் பழத்தை எடுத்துக் கொண்டு விதையை நீக்குங்கள். இவற்றில் அழுக்கு எளிதாக சேரும் என்பதால் தண்ணீரில் நன்றாக அலசிவிடுங்கள்.
2. இரண்டாவதாக, அரை கப் பாலை நன்றாகக் காய்ச்சி ஐந்து நிமிடங்கள் குறைந்த தணலில் வையுங்கள். பின்னர் தணலை அணைத்து பேரீச்சம் பழத்தை பாலில் சேர்க்கவும். இதை அரை மணி நேரம் அப்படியே ஊறவிடவேண்டும்.
3. மூன்றாவதாக, பேரீச்சம் பழம் நன்கு ஊறி இலகுவானவுடன் பால் சேர்த்து நன்கு கூழாக அரைத்துக் கொள்ளுங்கள்
4. பின்னர் இதில் சேமியா அல்லது ரவையை ஒரு தேக்கரண்டி அளவிற்குச் சேர்த்து அதில் ப்ரிம்ரோஸ் எண்ணெய் சில துளிகள் விட்டு நன்றாகக் கலக்கவும்.
5. பின்னர் முகத்தை மென்மையான க்ளென்சர் கொண்டு முகத்தைத் சுத்தம் செய்யவும். பின்னர் செய்துவைத்துள்ள மாஸ்க் கலவையை முகத்திலும் கழுத்திலும் பூசவும். இந்த இயற்கை கலவை முகத்தில் அரைமணி நேரம் வைத்திருக்கவும்.
6. இறுதியாக முகத்தில் சிறிது நீரை தெளிக்கவும். இந்த கலவை கரையத் துவங்கும்போது முகத்தில் சுற்றுவட்டமாக தேய்த்துவிட்டு நன்கு தண்ணீரில் அலசவும். பின்னர் முகத்தை ஆறவிடவும். வாரம் ஒருமுறை இதை செய்வதால் முகத்தில் கண்கூடான நல்ல மாற்றங்களைக் காணலாம்.
இதுபோன்று உங்களிடமும் பேரீச்சம்பழத்தினால் செய்யக் கூடிய சரும பொலிவிற்கான குறிப்புகள் இருந்தால் கீழே கமெண்ட் பாக்ஸில் எங்களுக்கு நீங்கள் தெரிவிக்கலாமே?