28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
201702251440540794 evening snacks chicken bonda SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சிக்கனில் போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று சிக்கன் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா
தேவையான பொருட்கள் :

சிக்கன் கைமா – கால் கிலோ,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
போண்டா மாவு – 250 கிராம்,
சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் அரை – டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பூண்டு – 5 பல்,
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,
பொட்டுக்கடலை – 50 கிராம்,
இஞ்சி – 2 சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

* எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைக்கவும்.

* மிக்சியில் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாக அரைத்த பின் கடைசியா சிக்கனை போட்டு அரைத்து எடுக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும். சிக்கன் நன்றாக வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் போண்டா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.

* சூப்பரான மாலைநேர ஸ்நாக்ஸ் ஸ்பைஸி சிக்கன் போண்டா ரெடி.

* அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.201702251440540794 evening snacks chicken bonda SECVPF

Related posts

பனீர் காளான் சீஸ் மிக்ஸ்

nathan

சிக்கன் நூடுல்ஸ்

nathan

சுவையான கார்லிக் பிரட் ரெசிபி

nathan

புளி அவல் செய்வது எப்படி

nathan

சத்தான சம்பா கோதுமை ரவை அடை

nathan

குழந்தைகளுக்கான காலிபிளவர் மசாலா தோசை

nathan

மாலைநேர ஸ்நாக்ஸ் மிளகு போண்டா

nathan

வரகு பொங்கல்

nathan

எள் உருண்டை :

nathan