நரை முடி 50 வயதிற்கு பின் வந்தால் ஏற்றுக் கொள்ளலாம். 30 களிலேயே நிறைய வரத் தொடங்கினால் டை களை உபயோகிக்காமல் இயற்கையான முறையில் சில குறிப்புகளை உபயோகித்தால் மேற்கொண்டு நரை முடி வராமல் தடுக்க முடியும்.
நாம் சரியாக கூந்தலை பராமரித்தால் நரை முடியை தள்ளிப் போடலாம். வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய் தான் வயதான பின்னும் பாட்டிக்களின் கூந்தல் கருமையாக இருக்க காரணம்.
நரை முடிக்காக டைகளை என்றும் உபயோகிக்காதீர்கள். இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளைக் கொண்டு இயற்கை முறையில் தீர்வு காணுங்கள்.
உருளைக் கிழங்கு தோல்: 5 உருளைக் கிழங்கின் தோலை உரித்துக் கொள்ளுங்கள். அந்த தோலை 200 மி.லி. அளவு நீரில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வையுங்கள்.
20 நிமிடங்கள் பிறகு அடுப்பை அணைத்து ஆறியதும் வடிகட்டி அந்த நீரை தலையில் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து குளியுங்கள். வாரம் இருமுறை செய்து பார்த்தால் நரை முடி மறையும்.
இஞ்சி சாறு : நரை முடியை கருமையாக்க வேண்டுமானால், இஞ்சியைத் துருவி, அதனுடன் பால் சேர்த்து மைய அரையுங்கள். பின் இதனை நரை முடியின் மீது தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து குளித்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபடலாம். குறிப்பாக இந்த செயலை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.
மிளகு நீர் : நீரில் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரை கூந்தலில் தடவி மசாஜ் செய்து, பின் கூந்தலை அலச வேண்டும்.
மருதாணி மற்றும் தயிர் : மருதாணி இலையை அரைத்து அதனுடன் சிறிது தயிர் கலந்து கொண்டு, அதனை நரைமுடியின் மீது தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தால், நரை முடி மறையும்.
விளக்கெண்ணெய் : விளக்கெண்ணெயை சுட வைத்து அதில் எலுமிச்சை சாற்றினை கலந்து கொள்ளுங்கள். இதில் மருதாணி பொடியை கலந்து ஸ்கால்ப்பில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு குளித்து வந்தால், நரைமுடி மறையும். இதனை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்தால் நரை முடி மறையும்.