30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
peeloffmaskrecipestodeepcleanseyourpores 06 1478420176
சரும பராமரிப்பு

உங்கள் சருமத் துவாரங்களை ஆழமாக சுத்தம் செய்யும் பீல் ஆப் மாஸ்க்குகள்

கரும்புள்ளிகள் மறையவும், உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யவும் முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்கவும் இந்த பீல் ஆப் மாஸ்குகளை முயன்று பார்க்கலாமே?

பீல் ஆப் மாஸ்குகள் அல்லது பிரித்து எடுக்கும் முகப் பூச்சுக்கள் பற்றி நாம் நினைக்கும்போது நமக்கு மிகவும் விலையுயர்ந்த ஸ்பாக்களும் அதில் வாங்கப்படும் அதிகமான கட்டணங்களும் தான் நினைவிற்கு வரும். வீட்டில் உள்ள இயற்கை பொருட்களைக் கொண்டு இந்த மாஸ்குகளை செய்யமுடிந்தால்? ஆம், ஸ்பாக்களில் கிடைக்கும் பழங்கள் அல்லது அதற்கும் சிறப்பான பலன்களைத் தரும் என்று நாங்கள் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

அது எப்படி வழக்கமாகக் கிடைக்கும் ஸ்க்ரப்களை விட இது சிறப்பாக இருக்கும் ? ஸ்க்ரப்கள் சருமத்தின் மேலுள்ள இறந்த செல்களை நீக்கி சருமத் துளைகளை சோத்தம் செய்யும்.

அதே நேரம் இந்த பீல் ஆப் மாஸ்குகள் சற்று அதிகமாக செயல்பட்டு இறந்த சரும அடுக்குகளை மட்டும் களையாமல் சருமத்தின் அழுக்குகளை, கரும்புள்ளிகளை மற்றும் ரோமங்களை நீக்குவதால் சருமம் புத்துயிர்பெற்று பொலிவுறுகிறது.

பீல் ஆப் மாஸ்குகளில் நீங்கள் நினைப்பதை விட அதிக வழிமுறைகள் உள்ளன. அதாவது பல்வேறு உட்பொருட்களை மாற்றி உச்ச பலன்களை அடையும் வரை முயற்சி செய்து உங்களின் குறிப்பிட்ட பிரச்னைக்கு தீர்வுகாண முடியும்.

கவனம். இரு சருமங்கள் ஒரே மாதிரியானவை அல்ல என்பதுடன் ஒருவருக்கு ஒத்துப்போகும் செய்முறை மற்றவருக்கு சரியாக இருக்கும் என்று கூற முடியாது. எனவே முதலில் சருமத்தின் ஒரு சிறு பகுதியில் இதை போட்டு சோதனை செய்து ஏதாவது பக்க விளைவுகள் தோன்றுகின்றனவா என்று பார்க்கவேண்டியது அவசியம்.

மேலும் உங்களை இழுத்தடிக்காமல் உங்கள் சருமத்தை வெண்மையாக்கவும் பொலிவாக்கவும், சருமத் துளைகளை சீர் செய்யுவும் பீல் ஆப் மாஸ்குகள் செய்யும் முறைகளை இப்போது நாம் பார்க்கலாம்.

கரும்புள்ளிகளை நீக்கும் மாஸ்க் பிளாக்ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகளை ஆழமாகச் சென்று சுத்தம் செய்து சருமத்தில் காணப்படும் அசுத்தங்களையும் நீக்க இது உதவுகிறது.

ஒரு மேஜைக்கு கரண்டி பால் எடுத்துக் கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி ஜெலட்டின் பவுடரை போட்டு அதனை சற்று குறைவான நெருப்பில் ஐந்து முதல் பத்து நொடிகள் வரை வைக்கவும்.

ஜெலட்டின் பாலில் நன்றாகக் கரைந்தவுடன், உட்பொருட்கள் நன்கு கரையும் வரை கலக்கவும்.

இந்த கலவை சூடு குறையும் வரை ஆறவிடவும்.

சற்று வெதுவெதுப்பாகவும் தொட முடிந்த சூடு இருக்கும்போது, பிரஷ் கொண்டு முகத்தில் இலேசாக பூசவும். இந்த பூச்சு இருக்கும் வரை 10 நிமிடம் காத்திருக்கவும். பின்னர் மெதுவாக இந்த பூச்சு அல்லது மாஸ்க்கை பிரித்தெடுத்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

முதிர்ச்சியைத் தடுக்கும் மாஸ்க் இந்த மாஸ்க் சருமத்தின் கொலாஜென் அளவை ஊக்குவித்து சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தைத் தடுக்கும்.

இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு அதை ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறில் கலந்து அதை கழுத்து மற்றும் முகத்தில் ஒரு மெல்லிய பூச்சாக பூசவும். பின்னர் உடனடியாக திஷ்யூ பேப்பர் கொண்டு இந்த மாஸ்கின் மீது மூடவும். மீண்டும் அதன் மீது மற்றுமொரு முறை மாஸ்க் கலவையை தடவவும்.

பின்னர் இது நன்றாகக் காயும் வரை வைத்து பின்னர் சட்டென்று பிரித்தெடுக்கவும். பின்னர் முகத்தை அலசி உலரவிடவும்.

சருமத்தை வெண்மையாக்கும் மாஸ்க்

இந்த மாஸ்க் சருமத்தை புத்துயிர் பெறச்செய்து வெண்மையாக்கி நிறத்தை மேம்படுத்துகிறது.

ஒரு தேக்கரண்டி சருமத்திற்கு உகந்த க்ளூவை (ஸ்கின் சேப் க்ளு) ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். ஒரு ஆக்ட்டிவேட்டட் சார்கோல் வில்லையை திறந்து அதை கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். அதில் ஐந்து துளிகள் பாதாம் எண்ணையை கலந்து ஒரு டூத் பிக் அல்லது குச்சியைக் கொண்டு நன்கு கலக்கவும்.

இந்த மாஸ்க்கை உங்கள் முகம் முழுவதும் பூசி நன்கு காயும் வரை காத்திருந்து பின்னர் மெதுவாக பிரித்தெடுக்கவும்.

சருமப் பொலிவூட்டும் மாஸ்க் இந்த மாஸ்க் சருமத்தை பொலிவூட்டி, வெண்மையாக்கி தசைகளை இறுகச் செய்யும். ஒரு மேஜைக் கரண்டி வெள்ளரிச் சாறு, ஒரு மேஜைக் கரண்டி பன்னீர், பத்து துளிகள் எலுமிச்சைச் சாறு மற்றும் 1 தேக்கரண்டி ஜெலட்டின் பவுடர் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்கு அனைத்துப் பொருட்களும் கரையும் வரை அடித்துக் கலக்கவும். உங்கள் முகத்தை ஒரு மென்மையான க்ளென்சர் அல்லது சோப்பு கொண்டு சுத்தப்படுத்தி உலரவிடவும். பின்னர் இந்த மாஸ்க்கை ஒரு மெல்லிய பூச்சு பூசி உலரவிட்டு உங்கள் சருமம் இருக்கலாம் உணர்வைத் தரும்போது மெல்ல பிரித்தெடுக்கவும்.

சருமத் துளைகள் சுத்தம் செய்யும் மாஸ்க் இந்த பீல் ஆப் மாஸ்க் இயற்கையான உட்பொருட்களைக் கொண்டு சருமத் துளைகளை சுத்தம் செய்து அவற்றை சுருக்குகின்றது. ஒரு மேஜைக் கரண்டி தேன், பால் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதை மிதமான நெருப்பில் இந்த கலவை சற்று கெட்டியாகவும் ஓட்டும் பாங்கில் வரும் வரை சூடாக்கவும். அதை இறக்கி சூடு ஆறவிடவும். ஆறிய பிறகு அதை முகத்திலும் கழுத்திலும் பூசவும். ஒரு 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து அதனைப் பிரித்தெடுத்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும்.

சருமத்திற்கு சக்தியூட்டும் மாஸ்க் இந்த மாஸ்க் உங்கள் பொலிவிழந்த சோர்வான சருமத்திற்கு புதிய தெம்பூட்டும். ஒரு கிண்ணத்தில் முட்டை வெள்ளைக்கருவை தனியாக பிரித்தெடுத்து வைத்துக் கொள்ளவும். அரை கப் க்ரீன் டீயில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு, இரண்டு மேஜைக்கரண்டி ஜெலட்டின் பவுடரை எடுத்துக் கொள்ளவும். இதை ஐந்து முதல் 10 நொடிகளுக்கு மைக்ரோவேவில் வைத்து உட்பொருட்கள் கரைந்ததும் நன்கு கலக்கிக் கொள்ளவும். இந்த கலவையை சீக்கிரம் ஆறவைக்க சிறிது நேரம் பிரிட்ஜில் வைக்கவும். இந்த கலவையை முட்டை வெள்ளைக்கருவுடன் சேர்த்து கிண்ணத்தில் நன்கு நுரை பாங்கில் வரும்வரை கலக்கி அடிக்கவும். இந்த மாஸ்க்கை முகத்தில் இரண்டு அல்லது மூன்று பூச்சுக்கள் போடவும். இதை 20 அல்லது 30 நிமிடங்கள் உலரவிட்டு பின்னர் பிரித்தெடுக்கவும். உங்களிடம் இதே போல் வீட்டில் செய்யக்கூடிய பீல் ஆப் மாஸ்க் பற்றிய குறிப்புகள் இருந்தால் கீழே கமெண்ட் பகுதியில் குறிப்பிடுங்களேன்!

peeloffmaskrecipestodeepcleanseyourpores 06 1478420176

Related posts

ஃபேர்னஸ் க்ரீம் போடுவது சருமத்திற்கு நல்லதா?

nathan

அழகுக் கட்டுரைகள் – அழகு உள்ளப் பயிற்சி & உடற்பயிற்சி & அழகு ஒப்பனை முறைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஐஸ் கட்டியால் சருமத்திற்கு கிடைக்கும் சில அழகு ரகசியங்கள்!!!

nathan

கால்களில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பது எப்படி?தெரிஞ்சிக்கங்க…

nathan

ஆலிவ் ஆயிலை இவ்வாறு முகத்தில் அப்ளை பண்ணுங்கள்… அதிக பலன் கிடைக்கும்…

sangika

டாட்டூ: ஆபத்தை சுமந்து வரும் அழகு

nathan

உங்களுக்கு தெரியுமா ஐந்தே நாட்களில் முழங்கால் மற்றும் மூட்டு வலியை குணமாக்கும் அற்புத பானம்!

nathan

வயிற்றில் வெடிப்புக்கள் உள்ளதா?

nathan

பீட்ரூட் நமது உதட்டுக்கும் நன்மை செய்கிறது என்றால் நம்புவீர்களா?

nathan