25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1470291680 7122
சிற்றுண்டி வகைகள்

சுவை மிகுந்த மீன் கட்லெட்

தேவையான பொருட்கள்:

மீன் – 1/2 கிலோ (முள் இல்லாத வஞ்சிரம் மீன்)
உருளைக்கிழங்கு – 2
சி-வெங்காயம் – 100 கிராம்
பச்சைமிளகாய் – 5
சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்தூள் – 1/2 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது – 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி, புதினா – 1 தேவையான அளவு
ரஸ்க் – 4 (தேவைக்கு ஏற்ப)
முட்டை – 2 (தேவைக்கு ஏற்ப)
எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் மீன், உருளைக்கிழங்கு இரண்டையும் ஆவியில் வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். இதன் பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா இலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

* இதனை மீன் கலவையில் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இந்த கலவையில் மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

* முட்டையின் வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து அகன்ற பாத்திரத்தை உடைத்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.

* வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மீன் கலவையை சின்ன சின்ன உருண்டைகளாக தட்டி முட்டையில் தோய்த்த பின், ரஸ்க் தூளில் புரட்டி எடுத்து பொரித்தால் சுவையான மீன் கட்லெட் தயார்.1470291680 7122

Related posts

அரட்டிப்பூவு போஸா

nathan

சப்பாத்தி – தால்

nathan

திணைஅரிசி காய்கறி உப்புமா

nathan

குழந்தைகளுக்கு சத்தான பச்சை பட்டாணி ஸ்டஃப்டு சப்பாத்தி

nathan

சுவையான உருளைக்கிழங்கு சமோசா

nathan

ஆப்பம் செய்வது எப்படி?

nathan

ஜவ்வரிசி பக்கோடா

nathan

வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்

nathan

சிக்கன் போண்டா

nathan