36.7 C
Chennai
Monday, Jul 14, 2025
201702221315338853 ragi carrot roti SECVPF
சிற்றுண்டி வகைகள்

காலை உணவிற்கு உகந்த கேழ்வரகு – கேரட் ரொட்டி

காலை உணவிற்கு கேழ்வரகை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கேழ்வரகு, கேரட் சேர்த்து சத்தான ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காலை உணவிற்கு உகந்த கேழ்வரகு – கேரட் ரொட்டி
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கேரட் – 2
கொத்தமல்லி, கறிவேப்பிலை- 1 கைப்பிடியளவு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, ஆகியவற்றை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கேரட்டை துருவிக் கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, கேரட் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* இந்தக் கலவையில் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிசைந்த மாவை சிறு சிறு ரொட்டிகளாக தட்டி தோசைக் கல்லில் போட்டு சுற்றி சிறிது எண்ணெய் சேர்த்து சுட்டெடுக்கவும்.

* சுவையான கேழ்வரகு கேரட் ரொட்டி தயார்

* இது காலை உணவிற்கு உகந்த சத்தான உணவாகும்.201702221315338853 ragi carrot roti SECVPF

Related posts

லசாக்னே

nathan

மூங்தால் பன்னீர் சப்பாத்தி

nathan

சுவையான பொரி விளங்காய் உருண்டை

nathan

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

nathan

சத்தான வெஜிடபிள் மோ மோ

nathan

கார பூந்தி

nathan

சுவையான பேரிச்சம்பழம் லட்டு செய்முறை!

nathan

பீட்ரூட் ராகி தோசை

nathan

மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வடை

nathan