24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
baldhead 02 1478067150
தலைமுடி சிகிச்சை

இந்த எண்ணெயை தினமும் யூஸ் பண்ணுனா வழுக்கை தலையிலும் முடி வளருமாம்!

வழுக்கைத் தலை பிரச்சனையால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். ஒருவருக்கு வழுக்கைத் தலை பல்வேறு காரணிகளால் ஏற்படலாம். அதில் மரபணுக்களால் ஏற்படும் வழுக்கைத் தலையில் மீண்டும் முடி வளரச் செய்வது என்பது கடினம்.

ஆனால் மருத்துவர் டேவிட் வில்லியம்ஸ் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யும் ஓர் எண்ணெய் குறித்து கூறியுள்ளார். இங்கு அந்த எண்ணெய் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து பயன்படுத்தி நன்மைப் பெறுங்கள்.

ஒமேகா-9 கொழுப்பு அமிலம் மருத்துவர் டேவிட் வில்லியம்ஸ் கூறும் எண்ணெயில் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது தலைமுடி மற்றும் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். அது வேறு எந்த ஒரு எண்ணெயும் இல்லை, நம் சமையலறையில் உள்ள விளக்கெண்ணெய் தான்.

இதர சத்துக்கள் விளக்கெண்ணெயில் வைட்டமின் ஈ, கனிமச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் உள்ளது. மேலும் இதில் வலிமையான ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள் உள்ளது. விளக்கெண்ணெய் தலைமுடி, புருவம், கண் இமைகள் போன்றவற்றின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, வலிமையையும் அதிகரிக்கும்.

வழுக்கையில் முடி வளர முக்கிய காரணம் வழுக்கைத் தலையிலும் முடி வளர்வதற்கு முக்கிய காரணம், விளக்கெண்ணெயில் உள்ள புதுப்பிக்கும் தன்மைகள் தான். அதிலும் இதில் சாச்சுரேட்டட் கொழுப்புக்களான ட்ரைகிளிசரைடு உள்ளது. அதே சமயம் இதில் ரிசினோலியிக் அமிலம் உள்ளது. இது ஸ்கால்ப்பில் உள்ள நோய்த்தொற்றுகளைப் போக்கும்.

பயன்படுத்தும் முறை விளக்கெண்ணெயை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும். வழுக்கைத் தலை உள்ளவர்கள் இதை தினமும் செய்து வந்தால், வழுக்கையிலும் முடி வளர்வதைக் காணலாம்.

நிணநீர் ஓட்டம் விளக்கெண்ணெயால் வழுக்கைத் தலையில் முடி வளர்வதற்கு டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் கூறுவது, இது நிணநீர் ஓட்டத்தைத் தூண்டுகிறது. மேலும் வேறு எந்த ஒரு இயற்கைப் பொருளும் இச்செயலை செய்வதில்லை, விளக்கெண்ணெய் மட்டும் தான் செய்வதாகவும் மருத்துவர் கூறுகிறார்.

baldhead 02 1478067150

Related posts

அழகுக் கூந்தலுக்கு தூயத் தேங்காய் எண்ணெய்

nathan

உங்களுக்கு வெள்ளை முடி அதிகமா இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க

nathan

ஒரே இரவில் மென்மையான தலைமுடியைப் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க…

nathan

உங்களுக்கு எவ்வளவு தலைக்கு குளிச்சாலும் முடி எண்ணெய் பிசுக்காவே இருக்கா? இதை முயன்று பாருங்கள்!

nathan

உங்களுக்கு தெரியுமா தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கும் ஷாம்பு !

nathan

உங்களுக்கு தெரியுமா கூந்தல் வறட்சியைப் போக்கும் சிறப்பான சில முட்டை மாஸ்க்குகள்!!!

nathan

சுருள் முடி இருப்பவர்களின் கவனத்திற்கு

nathan

இள நரை மறையணுமா?

nathan

பளபளப்பான மற்றும் வலிமையான கூந்தலை பெற

nathan