29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
16 1444993279 javvarisisundal
​பொதுவானவை

ஜவ்வரிசி சுண்டல்

இந்த சுண்டலில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜவ்வரிசி சுண்டல். இது சற்று வித்தியாசமாக இருக்கும். சரி, இப்போது அந்த ஜவ்வரிசி சுண்டலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – 1/4 கப்
துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது) பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

செய்முறை: முதலில் ஜவ்வரிசியை இரவில் படுக்கும் போதோ அல்லது 4 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். அதுவும் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். பின்னர் பாசிப்பருப்பை வாணலியில் போட்டு லேசாக பொன்னிறமாக வரும் வரை வறுத்து, பின் அதில் பருப்பு மூழ்கும் வரை தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பருப்பானது நன்கு வெந்ததும், நீரை வடிகட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஜவ்வரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியைப் போட்டு, குறைவான தீயில் உலர்த்த வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து ஒருமுறை கிளறி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். இறுதியில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், ஜவ்வரிசி சுண்டல் ரெடி!!!

16 1444993279 javvarisisundal

Related posts

கிராமத்து கருவாட்டு தொக்கு

nathan

பைனாபிள் ரசம்

nathan

கொழுப்பை கரைத்திடும் – கொள்ளு ரசம்

nathan

தக்காளி மிளகு ரசம்

nathan

Kamarajar History in Tamil | காமராஜர் வாழ்க்கை வரலாறு

nathan

சுவையான கேழ்வரகு புட்டு

nathan

சூப்பரான மசாலா தால்

nathan

சூப்பர் டிப்ஸ்! வற்றல் குழம்புனா இப்படி தான் இருக்கனும்…!

nathan

மட்டன் கீமா நோன்பு கஞ்சி : செய்முறைகளுடன்…!

nathan