27.4 C
Chennai
Tuesday, Nov 19, 2024
neck 02 1478062957
சரும பராமரிப்பு

கழுத்துப் பகுதியிலுள்ள கருமையை 1 வாரத்தில் போக்கும் பொருள் எது தெரியுமா?

முகத்திற்கு அழகுபடுத்தும்போது கழுத்தை பராமரிப்பவர்கள் வெகு குறைவு. எளிதில் சூரிய ஒளி புகுந்துவிடும் பகுதி. இதனால் விரைவில் கருமையும் ஏற்பட்டுவிடும்.

கழுத்திலுள்ள கருமை தோற்றத்தை தனிமைப்படுத்தி காட்டும் இதனை போக்க எளியோய பொருட்களை கொண்டு சுலபமாக போக்கிடலாம். எப்படியென பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் சாறு :

வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுங்கள். அதனை கழுத்தில் போட்டு 15 நிமிடம் கழித்து கழுவவும். வெள்ளரிக்காய் கருமையை போக்கி, சருமத்திற்கு நிறமளிக்கும்.

யோகார்ட் :
யோகார்டில் உள்ள லாக்டிக் அமிலம் கருமையை அகற்றும். சருமத்திலுள்ள இறந்த செல்கள், நச்சுக்களை வெளியேற்றும். தினமும் காலை மாலையில் யோகார்டை தடவி காய்ந்த்தும் கழிவினால் ஒரே வாரத்தில் கருமை மறைந்துவிடும்.

பாதாம் : பாதாமை பொடி செய்து அல்லது ஊற வைத்து அரைத்து அதனுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் சிறிது பால் கலந்து கழுத்தில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து க்ழுவுங்கள். அழகான கழுத்து கிடைக்கும்.

சமையல் சோடா : சமையல் சோடா சிறந்த அழுக்கு நீக்கி. கழுத்தில் வியர்வை மற்றும் கிருமிகளால் உண்டாகும் தழும்புகளை மறைத்து சருமத்திற்கு நிறமளிக்கும். சமையல் சோடாவை நீரில் பேஸ்ட் போலச் செய்து கழுத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால் கருமை நிறம் மறையும்.

கடலை மாவு மற்றும் பால் : பால் கால் கப் எடுத்து அதனுடன் 2 ஸ்பூன் கடலை மாவு கலந்து கழித்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். தேவையென்றால் சிறிது மஞ்சள் பொடியும் கலந்தால் கழுத்து மின்னும்.

neck 02 1478062957

Related posts

அழகை இயற்கையாக மேருகூட்ட விரும்புகிறீர்களா?

nathan

வியர்வை நாற்றத்தைத் தடுக்க, குளிக்கும் நீரில் வெட்டிவேரை ஊறவைத்துக் குளிக்கலாம்.

nathan

முக‌ அழகை‌க் கூ‌ட்ட

nathan

சருமத்தை அழகாக்கும் பேபி ஆயில்

nathan

சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் பயனுள்ள தகவல்கள்!!

nathan

20 நிமிடங்களில் கழுத்தில் உள்ள கருமையை நீக்குவது எப்படி?

nathan

உங்கள் சருமம் மிளிர உத்திரவாதம் அளிக்கும் சாக்லேட் -புதினா ஸ்க்ரப் !

nathan

ஊற வைத்த அரிசி தண்ணீரில் நிறைந்துள்ள நன்மைகள்!!!

nathan

கழுத்துப் பராமரிப்பு

nathan