22.8 C
Chennai
Sunday, Dec 14, 2025
201702141258096023 bajra dal rice SECVPF
சைவம்

சத்து நிறைந்த கம்பு பருப்பு சாதம்

சிறுதானிய உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இன்று கம்பு, பருப்பு வைத்து சத்தான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்து நிறைந்த கம்பு பருப்பு சாதம்
தேவையான பொருட்கள் :

கம்பரிசி – ஒரு கப்
துவரம்பருப்பு – கால் கப்
பாசி பயிறு – கால் கப்
தண்ணீர் – 3 கப்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்தூள் – அரை ஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 2
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை – சிறிது

தாளிக்க :

எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்

பொடிக்க :

மிளகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
பூண்டு – 4

செய்முறை :

* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* கம்பரிசியும், பருப்பு வகைகளையும் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

* மிளகு, சீரகம், மிளகாய் வற்றலை மிக்ஸியில் பொடித்து கடைசியில் பூண்டு சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.

* குக்கரில் எண்ணெய் காய வைத்து கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.

* தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசி, பருப்பு, கொத்தமல்லி தழையும் சேர்த்து 5 விசில் போட்டு வேகவிடவும்.

* சத்தான கம்பு பருப்பு சாதம் ரெடி.

* தேங்காய் துவையல், தயிர், ஊறுகாயுடன் பரிமாறவும்.201702141258096023 bajra dal rice SECVPF

Related posts

மஸ்ரூம் சிக்கன் மசாலா: வீடியோ இணைப்பு

nathan

பீன்ஸ் பருப்பு மசியல் சமையல் குறிப்பு – Beans Paruppu masiyal Samayal kurippu

nathan

சுவையான மணத்தக்காளி வத்தக் குழம்பு

nathan

சத்தான சுவையான அரைக்கீரை குழம்பு

nathan

பூரிக்கு சூப்பரான சைடுடிஷ் வடகறி

nathan

கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்வது எப்படி

nathan

பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

nathan

சூப்பரான சைடிஷ் தயிர் உருண்டை குழம்பு

nathan

ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி

nathan