ld461102
தலைமுடி சிகிச்சை

கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு

‘ஐயோ என் பிள்ளைக்கு இள நரையாக இருக்கே என்ன செய்யலாம்’ என்று பெற்றோரும், மன அழுத்தத்துடன் இளைஞர் பட்டாளமும் இளநரை பிரச்னை யில் சிக்கித் தவிப்பதை அன்றாட வாழ்வில் காணலாம். இருபாலருக்கும் இளநரை என்றாலே அலர்ஜிதான். மிகவும் இளம் வயதில் தலைமுடி நரைக்கத் தொடங்கிவிட்டால் போச்சு அவ்வளவுதான்.ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை, சோர்வு, கவலை எல்லாமும் சேர்ந்து அவர்களின் எதிர்காலமே ஏதோ இருண்ட ரேஞ்சுக்கு மாறிவிடுவார்கள். என் முடியை கருப்பாக்க என்ன செய்யணும் என அனைவரிடமும் ஆலோசனை கேட்டு அத்தனையும் செய்து பார்த்து வெறுத்து விடுவர். முதலில் இளநரை என்றால் என்ன? அது ஏன் மிக இளம் வயதிலும் கூட வருகிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களிலிருந்து (hair follicles) வளர்கிறது.

அங்குதான் முடிக்கு கருமை நிறத்தைக் கொடுக்கும் மெலனின் (melanin) என்ற சாயம் உள்ளது. அதில் மெலனின் உற்பத்தி நின்றுவிட்டால் அந்த வேரிலிருந்து வளரும் முடிக்கு கருமை நிறம் இருக்காது. அது வெள்ளை முடியாகவே இருக்கும். இளம் நரைக்கு முக்கிய காரணம் பித்தம் மற்றும் அமிலத் தன்மையை ஏற்படுத்தும் உணவு. மேலும் ஊட்டச்சத்துக் குறைபாடு, தலையில் நீர்ச்சத்து அதிகம் இருத்தல்.தவறான ஷாம்பு, அதிகமான மாத்திரைகளை உண்பது – இவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். தலையில் பொடுகு அதிகம் இருந்தாலும் அவை வேர்க்கால்களை அடைத்து மெலனின் உற்பத்தியை குறைத்து நரையை அதிகப்படுத்தும். சரி, இளம் நரையை எப்படி திரும்பத் தோன்றாமல் சரிசெய்வது? இதோ அதற்கான முழுமையான விளக்கத்தை சொல்கிறார் பாத்திமா கனி.

மாங்கொட்டைக்குள் இருக்கும் விதையினை இரண்டு அல்லது மூன்று எண்ணிக்கையில் எடுத்து ஒரு தகர டப்பாவில் அது மூழ்கும் அளவிற்கு நீர்விட்டு நன்றாக நான்கு அல்லது ஐந்துநாட்கள் வரை தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் உலர்ந்த நெல்லிக்காயை வாங்கி அதை ஓர் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் ஊறிய மாங்கொட்டை பருப்பையும் ஊறிய நெல்லிக்காயையும், நெல்லிக்காய் ஊறிய தண்ணீரைவிட்டு நன்றாக அரைக்க வேண்டும். அந்தப் பசை கருப்பு நிறத்தில் மாறி இருக்கும்.அதை எடுத்து தலை முடியின் வேர்க்கால்களில் நன்றாகப் படும்படி தலைமுடியில் தடவி மறுநாள் தலை குளித்தால் இளம் நரை பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்கிறார். அவரின் திருமணத்திற்கு முன்பு இளம்நரை பிரச்னை இருந்ததாகவும் இந்த முறையை பின்பற்றிய பிறகு நிரந்தரத் தீர்வு கிடைத்ததாகவும் கூறுகிறார் பாத்திமா. நீங்களும் பக்கவிளைவுகளற்ற இந்த முறையை முயற்சிக்கலாமே?
ld461102

Related posts

கூந்தலின் எதிரி ஈரம்

nathan

சூப்பர் டிப்ஸ்! இளநரை ஏற்படுவதை தடுப்பதற்கான வழிகள்…!!

nathan

40-களில் நின்ற கூந்தல் வளர்ச்சியை எப்படி மீட்பது?

nathan

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க இஞ்சியை எப்படி பயன்படுத்துவது என்று தெரியுமா?

nathan

தலைக்கு ஹென்னா போடுவீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

வழுக்கை விழுகிறதா? – இதோ சில யோசனைகள்

nathan

உங்க முடியும் இப்படி ஆகணுமா? அப்ப இத படிங்க!

nathan

முடி உதிராமல் இருக்க முடியை கட்டுங்க!

nathan

ஷாம்புவா? இல்லை கண்டிஷனரா? எதை முதலில் பயன்படுத்த வேண்டும்?

nathan