25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
eye mark middle 2 19303
கண்கள் பராமரிப்பு

மொபைலில் கவனம்… வரலாம் கருவளையம்! அலர்ட் கேர்ள்ஸ்

முகத்தின் மற்ற பாகங்கள் தவிர்த்து கண்ணுக்குக் கீழ்ப் பகுதியில் மட்டும் பார்ப்பதற்குக் கருமை நிறமாகத் தெரிந்தால் அதைக் கருவளையம் என்று சொல்வோம். கருவளையம் எதனால் வருகிறது தவிர்ப்பது எப்படி என்பது குறித்துப் பேசுகிறார் அழகுக்கலை நிபுணர் ஜான்சி!

கருவளையம் எதனால்?

* எப்போதும் டிவி பார்க்கும் தலைமுறையினர் தொலைந்து போய்… இப்போது மொபைலில் மூழ்கிக் கிடக்கிறார்கள் பலர். தொலைக்காட்சி பார்க்கும் போது ரிமோட் மூலம் பல சேனல்களை மாற்றிக் கொண்டிருப்போம். நம் விருப்பம் மட்டுமில்லாமல் மற்றவர்களின் விருப்பத்தின் படி நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். அதனால் தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதில் இருந்து கொஞ்சமாவது ஓய்வு கிடைக்கும். ஆனால் செல்போனைப் பொறுத்தவரை அது தனிநபரின் கைக்குள் அடங்கிவிடுவதால் அவர் தொடர்ச்சியாக தனக்கு விருப்பமானதை நீண்ட நேரம் பார்க்க முடிகிறது. பல மணி நேரம் மெய்மறந்து செல்போனில் இருப்பதால் தூக்கம் பாதிக்கப்படுவதுடன், செல்போனின் தொடர்ந்த வெளிச்சத்தால் கண்கள் சோர்வடைகின்றன.
தூக்கமின்மை, சோர்வு, மன அழுத்தம் இதெல்லாம் கருவளையம் உருவாக காரணமாகின்றன. புகைப்பழக்கம், மது, குளிர்பானங்கள் , ஆரோக்கியமற்ற உணவுகள் உட்கொள்வதாலும் கருவளையம் உண்டாகலாம். அதிக நேரம் வெயிலில் இருந்தாலும் கருவளையம் உருவாகும்.

தவிர்ப்பது எப்படி?

* நன்றாக தூங்கப் பழகிக் கொள்ளுங்கள். தேவையற்ற மனக்குழப்பங்களைத் தவிர்க்கவும். குறைந்த பட்சம் ஒருநாளைக்கு 6 மணி நேரமாவது தூங்குவதை பழக்கமாக்கிக் கொள்ளலாம்.

* வெளியில் செல்லும் போது, தரமான சன் ஸ்கீரீன் லோஷனைப் பயன்படுத்துவதுடன் வெயில் நேரங்களில் கண்களுக்கு கூலர்ஸ் அணியலாம்.

* தண்ணீர் நிறைய குடிப்பது முகப்பொலிவைக் கொடுக்கும். ஆரோக்கியமான உணவுகளான காய்கறிகள், பழங்கள் எடுத்துக் கொள்ளும்போது அவை கண்களுக்கு கூடுதல் பொலிவைக் கொடுக்கும்.

* மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரை எடுத்துக் கொள்ளும் போதும், கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் போதும் கருவளையம் ஏற்படலாம். அதனால் மருந்துகளை உட்கொள்ளும்போது கவனம் அவசியம்.

* கண்களுக்கு மேக்கப் போடும் போது சரியாக சுத்தம் செய்யாவிட்டால் கருமை நிறம் ஏற்படும். எனவே தரமான மேக்கப் ரிமூவர் மூலம் கண்களைச் சுத்தம் செய்து கொள்வது நல்லது.

* தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் கலந்து கண்களுக்குக் கீழாக தடவி சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவினால் கருவளையம் குறையலாம்.

* ஆரஞ்சுச் சாறு, வெள்ளரிச் சாறு, பாதாம் எண்ணெய், ரோஸ் வாட்டர், பால், சேர்த்து கலந்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.

ஆக, உடல் மற்றும் மனநிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் டெக்னாலஜியைத் தேவையில்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்த்தால் கருவளையத்தில் இருந்து தப்பிக்கலாம்.
eye mark middle 2 19303

Related posts

உங்கள் புருவங்கள் அடர்த்தியாக வேண்டுமா? : இதோ அதற்கான சில டிப்ஸ்

nathan

நல்ல அடர்த்தியான கண் இமைகள் வேண்டுமா,tamil beauty tips for face

nathan

கருவளையம் மறைய. நீங்களும் அழகு ராணி தான்.

nathan

கருவளையத்தை போக்கும் குறிப்புகள்: ….

sangika

இமைகளை அடர்த்தியாக வளரச் செய்யும் எண்ணெய் !!

nathan

கருவளையங்களை போக்க சூப்பரான டிப்ஸ்

nathan

கருவளையம் மறைய வழி -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

கண் கருவளையங்களுக்கான சிறந்த‌ 11 அழகு குறிப்புகள்

nathan

அழகிய கண்களை பெறுவது எப்படி ?

nathan