25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
அழகு குறிப்புகள்மருத்துவ குறிப்பு

பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள உதவும் சக்தி வாய்ந்த பொருட்கள்

 

idrar_dis_0730ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயில் ஆலிவ் ஆயில் மற்றும் பாதாம் ஆயிலை ஒன்றாக கலந்து, அதனைக் கொண்டு தினமும் காலையில் பற்களை துலக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 5 நாட்கள் செய்து வந்தால், பற்கள் வெள்ளையாக ஜொலிப்பதை உணர்வீர்கள்.

ஸ்ட்ராபெர்ரி ஸ்ட்ராபெர்ரியை அரைத்து அதன் சாற்றினை பற்களில் தடவி, வாயை சிறிது நேரம் திறந்து உலர வைக்க வேண்டும். பின் வாயில் சிறிது பால் ஊற்றி கொப்பளித்து, பின் நீரால் கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்தால், பற்கள் வெண்மையடைவதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.

எலுமிச்சை சாறு எலுமிச்சையை வெட்டி, அதனை நீரில் சிறிது நேரத் நனைத்து, பின் அந்த நீரைக் கொண்டு பற்களை தேய்க்க வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், பற்கள் வெண்மையடையும்.
கேரட் ஜூஸ் பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள உதவும் பொருட்களில் ஒன்று தான் கேரட். அதற்கு தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவதோடு, கேரட்டை சாறு எடுத்து அதில் சிறிது உப்பு சேர்த்து, அதனைப் பயன்படுத்தி பற்களை தேய்க்க வேண்டும்.வேப்பிலை வேப்பிலையை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை பேஸ்ட் உடன் சேர்த்துப் பயன்படுத்தி பற்களை துலக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களும் வெள்ளையாகும்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு வாரம் 1 முறை பற்களை துலக்க வேண்டும். முக்கியமாக இந்த முறையை அன்றாடம் பயன்படுத்தினால், பற்கள் சென்சிடிவ் ஆகிவிடும். ஆகவே தினமும் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும்.

ஆப்பிள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்வதைத் தவிர்க்கவாம் என்று சொல்வார்கள். அதே சமயம் ஆப்பிளை அன்றாடம் ஒன்று சாப்பிட்டு வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் வலிமையுடனும், வெள்ளையாகவும் இருக்கும்.ஆரஞ்சு தோல் ஆரஞ்சு பழத்தின் தோல் கூட முத்துப் போன்ற பற்களைப் பெற உதவும். அதற்கு ஆரஞ்சு பழத்தின் தோலைப் பயன்படுத்தி வாரம் இரண்டு முறை பற்களை தேய்க்க வேண்டும். இதனால் விரைவில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பால் மற்றும் தயிர் பால் மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, அதனைப் பயன்படுத்தி பற்களை துலக்கி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்து வந்தாலும் நல்ல பலனைப் பெறலாம்.

Related posts

மாணவ-மாணவிகளுக்கு நற்பண்புகளே சிறந்த கல்வி

nathan

கருப்பை நீர்கட்டிகளை இல்லாது ஒழிக்க இதை செய்யுங்கள்!….

sangika

உங்களுக்கு தெரியுமா கலையில் வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் உடலில் இவ்வளவு அதிசயம் நிகழுமா?

nathan

இருதயத்தை பாதுகாக்கும் வழிகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…எப்போதெல்லாம் நாம் சுயநலவாதிகளாக இருக்கலாம்…?

nathan

சிறுநீரக தொற்று குறித்து ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!!!

nathan

சருமம் பளபளக்க, காண்போரை வசீகரிக்க‍ சில எளிய மருத்துவ முறை!…

sangika

குழந்தைகளுக்கான குளியல் பொடிகளை தயாரித்து பயன்படுத்துங்கள்..

nathan

இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள் !

nathan