29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
அழகு குறிப்புகள்

குளிர்கால மேக்கப் போடுவதற்கான டிப்ஸ்

 

tamil beauty tips

மேக்கப்புக்கு முன்…

”குளிர்காலத்துல முகம் கழுவ சோப்புக்கு பதில், மாய்ஸ்ச்சரைஸர் கலந்த மைல்டு சோப் அல்லது  ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம்.

மேக்கப் போடும்போது மட்டுமில்ல… மேக்கப் போடாம இருக்கும்போதும் முகம் கழுவியதும் மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை பண்ணினா, சருமம் ஈரப்பதத்தை இழக்காம எப்பவும் ஃப்ரெஷ்ஷா இருக்கும்.

நார்மல் மற்றும் ஆயில் சருமம் உள்ள வங்க குளிர்காலத்துல லோஷன் வடிவ மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்தலாம். வறண்ட சருமம் உள்ளவங்க, குளிர்காலத்துல சருமம் இன்னும் வறண்டு போகாம இருக்க, க்ரீம் வடிவ மாய்ஸ்ச்ச ரைஸர் அப்ளை செய்ததுக்கு அப்புறம் தான், மேக்கப் போடணும்.

ஃபேர்னஸ் க்ரீம் குளிர்காலத்துல சருமத்தை இன்னும் வறண்டு போகச் செய்யும். அதனால இதை பயன்படுத்துறதுக்கு முன்ன மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்யலாம்.

நாள் முழுக்க ஏ.சி அறையில இருக்கிற வங்க, கட்டாயம் மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்ததுக்கு அப்புறம்தான் மேக்கப் போடணும். இல்லைனா சருமம் வறண்டு போறது மட்டுமில்லாம, முகத்தில் சுருக்கங்களும் தோன்றும்.

மேக்கப் போடுவதற்கான டிப்ஸ்…

குளிர்காலத்துல லோஷன் வடிவ ஃபவுண்டேஷனுக்கு பதில், க்ரீம் வடிவ ஃபவுண்டேஷன் பயன்படுத்தும்போது சரும வறட்சியைத் தவிர்க்கலாம்.

இந்த சீஸனில் கன்சீலர் ஸ்டிக்குகள், தேங்காய் எண்ணெய் போல கெட்டிப்படும். அதனால அந்த ஸ்டிக்கை அப்படியே முகத்துல தேய்க்காம, கொஞ்சமா ஒரு ஸ்பூன்ல எடுத்து கை விரலால குழைத்து, கிரீம் பதத்துக்கு கொண்டுவந்து பயன்படுத்தலாம்.

வெயில்காலத்துல காம்பாக்ட் பவுடர் அப்ளை செய்துட்டு, முகத்தைத் துடைக்கும்போது, அந்த இடத்தில் மட்டும் பவுடரோட திக்கான கோட்டிங் கலைஞ்சி, திட்டு திட்டா ஆகிடும். குளிர்காலத்துல காம்பாக்ட் அப்ளை பண்ணும் போது நாள் முழுக்க ஃப்ரெஷ்ஷாவே இருக்கலாம்.

கன்னங்களில் அப்ளை செய்யும் பிளஷரை பொறுத்தவரை, கிரீம் மற்றும் பவுடர் என ரெண்டு வகையுமே இந்த சீஸனுக்கு ஒத்துப்போகும்.

லிப்ஸ்டிக் போடறதுக்கு முன்ன, கண்டிப்பா லிப் பாம் அப்ளை பண்ணணும். இது உதடுகளை வறட்சி, வெடிப்புகள்ல இருந்து பாதுகாக்கும்!”

Related posts

தாடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில இயற்கை கை வைத்தியங்கள்

sangika

இரவு க்ரீம் உபயோகப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

இது இதயநோய்களுக்கு தீர்வு காண உதவுகிறது!…

sangika

பனிக்காலத்தில் ஆரோக்கியமும் அழகும்!

nathan

எப்படி பெண்கள் தடம் மாறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்!தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

nathan

மருக்கள் மறைய முகம் பொழிவு பெற சூப்பர் டிப்ஸ்

nathan

வீட்டிலேயே Facial செய்வது எப்படி ?

nathan

அழகாக இருக்க எளிய வழி,

nathan

வயிற்றில் வெடிப்புக்கள் உள்ளதா?

nathan