23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

கரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை

piel335 வயதை தொடும் பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும் அவர்கள் இந்த ஸ்டீம் முறையை பின்பற்றி வந்தால் முகத்தில் உண்டான சுருக்கம் படிப்படியாக மறைவதை காணலாம்.

வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பதை விடவும், சில பொருட்களைப் போட்டு ஆவி பிடிப்பது நல்ல பலனைத் தரும். இங்கே இரண்டு வகை ஸ்டீம் முறைகளைத் தந்திருக்கிறேன். முயற்சித்துப் பாருங்கள்.

 வேப்பிலை ஸ்டீம்: வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் நாலைந்து வேப்பிலையைப் போடுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து வேப்பிலையை எடுத்துவிட்டு ஆவி பிடியுங்கள். பிறகு, முகத்தைத் துடைக்காமல், ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி, முகம் முழுக்க லேசாக ஒத்தி விடுங்கள். இதனால் முகம் குளிர்ச்சியாவதுடன், கன்னிப் போன தோல் மிருதுவாகும். அரிப்பு, பருக்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் நிரந்தரமாக விடுபடலாம்.

எலுமிச்சை ஸ்டீம்: கொதிக்கிற தண்ணீரில், 1 எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஆவி பிடியுங்கள். முடித்ததும் முகத்தைத் துடைக்காமல், `ஐஸ்’ கட்டி ஒத்தடம் கொடுங்கள். பிறகு, ஏடு இல்லாத தயிருடன் கடலை மாவை கலந்து `பேக்’ போட்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். மாதம் ஒருமுறை இதைச் செய்து வந்தாலே முகத்தில் வந்த சுருக்கம் ஓடிப்போகும். இனி, சுருக்கமும் வராது. எலுமிச்சைக்கு, முகத்தின் கருமையையும் கரும்புள்ளிகளையும் விரட்டி விடுகிற சக்தி உண்டு.

Related posts

இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் வருவதைத் தடுக்கலாம்…….

sangika

இதோ பெண்களை கவரும் விதவிதமான சல்வார்கள்!

nathan

முகத்தின் குறைகளை எப்படி சரிசெய்வது?

nathan

சரும அழகை அதிகரிக்கும் வேப்பிலை

nathan

முகம் பட்டுப்போல் பளபளப்பாக இவற்றை செய்து வாருங்கள்…

sangika

how get clean acne free face..பருக்கள் இல்லாத பொலிவான முகத்தைப் பெற சில வழிகள்

nathan

முகத்தில் சுருக்கம், முதிர்ச்சி ஆகியவற்றை தடுக்க அவகாடோ வை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

சூப்பர் டிப்ஸ்..பொலிவான சருமத்திற்கு தர்பூசணி

nathan

உங்களுக்கு தெரியுமா கருவளையத்தைப் போக்க வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்…

nathan