25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1475040911 3012
அசைவ வகைகள்

சைனீஸ் இறால் நூடுல்ஸ்

தேவையான பொருட்கள்:

அரிசி நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (500 கிராம்)
இறால் – கால் கிலோ
வெங்காயம் – ஒன்று
செலரி (நறுக்கியது) – ஒரு கப்
கேரட் – ஒன்று
வெங்காய தாள் – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சோயா சாஸ் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
அஜினோ மோட்டோ – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் இறாலை கழுவி சுத்தம் செய்துக்கொள்ளவும், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கேரட்டை துருவிக்கொள்ளவும். செலரி, வெங்காய இலைகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பின்பு ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்த பின்பு அதில் நூடுல்ஸை போடவும். 5 நிமிடங்கள் வெந்தபின்பு எடுத்து நீரை வடிகட்டவும். பிறகு அதில் குளிர்ந்த நீரை ஊற்றி நன்கு அலசிவிடவும். நீர் வடிந்தபின்பு, சிறிது எண்ணெய் ஊற்றி நூடுல்ஸ் அனைத்திலும் படுமாறு தடவி வைக்கவும்.

அதன்பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கிய பின்பு இறாலை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும். துருவின கேரட், நறுக்கின செலரி ஆகியவற்றைப் போட்டு நன்றாக கிளறவும்.

பின்பு அதில் சோயா சாஸ் விட்டு நன்றாக கிளறவும். லேசான தீயில் அடி பிடிக்காமல் வேகவிடவும். சற்று வெந்ததும் அஜினோ மோட்டோ சேர்க்கவும். காய்கள் போட்டு அனைத்தும் வெந்தபிறகு நூடுல்ஸை உதிர்த்துப் போட்டு நன்றாக கிளறவும்.

கடைசியாக நறுக்கின வெங்காய இலை, தூவி கிளறி இறக்கவும். சுவையான சைனீஸ் இறால் நூடுல்ஸ் தயார். இவற்றை டொமாட்டோ சாஸ் உடன் சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.1475040911 3012

Related posts

சூப்பரான மாங்காய் சிக்கன் குழம்பு

nathan

ஆனியன் சிக்கன் வறுவல்

nathan

மதுரை முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு

nathan

காரைக்குடி நண்டு மசாலா

nathan

ஸ்பானிஷ் முட்டை ஆம்லெட்

nathan

சுவையான க்ரீன் சிக்கன் கிரேவி

nathan

முட்டை சில்லி

nathan

இறால் பெப்பர் ப்ரை (prawn pepper fry)

nathan

நாட்டுக்கோழி வறுவல்

nathan