உளுந்து இடுப்பு, மூட்டு வலிகளுக்கு மிகவும் நல்லது. அடிக்கடி உளுந்தில் செய்த உணவை சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. உளுந்து கார புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சுவையான சத்தான உளுந்து கார புட்டு
தேவையான பொருட்கள் :
உளுந்து – 1 கப்
தேங்காய் துருவல் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
தாளிக்க :
கடுகு, உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை
எண்ணெய் – 1 ஸ்பூன்
செய்முறை :
* கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து, தண்ணீர் அதிகம் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த மாவை இட்லி சட்டியில் இட்லிகளாக ஊற்றி வேக வைத்து வெந்ததும் ஆற வைத்து உதிர்த்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, போட்டு தாளித்த பின் உதிர்த்து வைத்துள்ள உளுந்து இட்லியை போட்டு நன்றாக கிளறவும்.
* அடுப்பை மிதமான தீயில் வைத்து தேங்காய் துருவல், கொத்தமல்லியை போட்டு உதிரியாக வரும் வரை அடுப்பில் வைத்து இறக்கவும்.
* சுவையான சத்தான உளுந்து கார புட்டு ரெடி.