கூந்தல் கருமையாக நரை முடி இல்லாமல் இன்னும் நிறைய பாட்டிகள் கிராமத்தில் வலம் வருகிறார்கள்.
இதற்கு காரணம் வேப்பெண்ணெய்தான். கிராமங்களில் இப்பவும் வேப்பெண்ணெய் தலைக்கு தடவுபவர்கள் உண்டு.
வேப்பெண்ணெய் கொண்டு எப்படி உங்கள் கூந்தல் நீளமாக வளரச் செய்வது என பார்க்கலாம்.
கூந்தல் எண்ணெய் :
அரை கப் தேங்காய் எண்ணெயுடன் 2 டேபிள் ஸ்பூன் வேப்பெண்ணெய் மற்றும் 10 துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள்.
இதனை லேசாக சூடுபடுத்தி வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்தாக் முடி உதிர்வது தடுக்கப்பட்டு நீளமாக வளரும்.
பொடுகு மாஸ்க் :
1 டீஸ்பூன் வெந்தயப்பொடி, 1 டீஸ் பூன் நெல்லிக்காய் பொடி, 2 துளி தேயிலை மர எண்ணெய் இவற்றுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊற விடுங்கள்.
பின் தலைமுடியை அலசவும். வாரம் இருமுறை செய்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்
கூந்தல் அரிப்பிற்கு :
சம அளவு ஆலிவ் எண்ணெய் மற்றும் வேப்பெண்ணெய் கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். 1 மணி நேரம் பின்பு தலைமுடியை ஷாம்பு கொண்டு அலாசுங்கள். வறட்சி மறைந்து கூந்தல் பளபளக்கும்.
கண்டிஷனர் : தலைமுடி வேர்க்கால்களுக்கு பலம் தரும் வகையில் , வேப்பெண்ணெயுடன் ஒரு முட்டை வெள்ளைக் கருவை கலந்து ஸ்கால்ப்பில் தடவுங்கள். முடி காய்ந்தவுடன் தலைக்கு குளிக்கவும்.
கூந்தல் மிருதுவாக : நீங்கள் உபயோகிக்கும் ஷாம்புவுடன் சிறிது வேப்பெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை தலைக்கு குளிக்கும்போது உபயோகித்தால் ஷாம்புவினால் வறட்சி உண்டாகாமல் கூந்தல் மிருதுவாகும். ரசாயன பாதிப்புகள் இருக்காது.