எலுமிச்சையில் அதிக விட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இதிலுள்ள பி காம்ப்ளக்ஸ் மற்றும் சி விட்டமின் சருமம் முதுமையடைவதை தடுக்கிறது.
செல் வளர்ச்சியை தூண்டுவதால் இளமையான சருமம் கிடைக்கிறது. அதோடு கூந்தல் வளர்ச்சிய்யையும் அதிகரிக்கச் செய்யும். எலுமிச்சை சாறு கொண்டு எப்படி உங்களை அழகு படுத்தலாம் என பார்க்கலாம்.
எலுமிச்சை மாஸ்க் :
முகத்தில் கிருமிகளின் தொற்றால் உண்டாகும் கரும்புள்ளி, மங்கு ஆகியவற்றை எளிதில் போக்கும்.
முதலில் எலுமிச்சையை துண்டாக வெட்டிக் கொள்ளுங்கள்.
எலுமிச்சை துண்டில் தேனை தடவி கரும்புள்ளி இருக்குமிடத்தில் தேய்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை செய்து பாருங்கள். கரும்புள்ளி மறைந்து சருமம் பளிச்சிடும்.
தேவையானவை :
நாட்டு சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – அரை மூடி.
செய்முறை :
மேலே சொன்னவற்றை ஒன்றாக கலந்து பாதங்களில் தேய்த்தால் கடினமான பகுதி மிருதுவாக மாறி விடும். வெடிப்பு அழுக்குகள் தங்காது. தினம் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் மிருதுவான அழகான பாதங்கள் கிடைக்கும்.
பொடுகு மறைய :
அதிகப்படியான பொடுகு இருந்தால் தலையில் நேரடையாக எலுமிச்சை சாறை ஸ்கால்ப்பில் தடவி 15 நிமிடம் கழித்து தலைமுடியை அலாசுங்கள். இதனால் பொடுகு மறைந்து முடி வளர்ச்சி அதிகரிக்கும்.