25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
222 1
முகப்பரு

முகப்பருவை விரட்டும் எளிய மூலிகைகள்!

வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு கலந்து முகப்பருக்களின்மீது பூசி வந்தால் பரு உடைந்து குணம் கிடைக்கும். பெரிய அளவில் பருக்கள் வந்தால் வெள்ளைப்பூண்டை அரைத்து பருக்களின்மீது பூசி வர, நிவாரணம் கிடைக்கும். சுத்தமான சந்தனத்தையும், கஸ்தூரி மஞ்சளையும் மையாக அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் காலப்போக்கில் குணம் கிடைக்கும். கருந்துளசி இலைகளை பருக்களின்மீது பற்று போட்டு வந்தாலும் குணம் கிடைக்கும். புதினா, செம்பருத்தி இலை, மல்லிகை இலை மூன்றையும் தண்ணீருக்குப்பதிலாக தயிர் விட்டு அரைத்து பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும். ஜாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் அரைத்து பருக்களின்மீது பூசி வந்தால் குணம் கிடைக்கும்.
கறிவேப்பிலைக்கொழுந்தை மையாக அரைத்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, பருக்கள் குறையும். வேப்பிலைச்சாறு தினமும் குடித்து வந்தால் பருக்கள் வராமல் காத்துக்கொள்ளலாம்.

222

Related posts

வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே கருமையான திட்டுகளை சரி செய்து விடலாம்…..

sangika

பருக்களைப் போக்கும் பார்லர் மற்றும் வீட்டு சிகிச்சைகள்

nathan

முகப்பரு வடு நீக்க வெந்தயம் பெஸ்ட் :

nathan

முகப்பரு தழும்பை போக்க எலுமிச்சை சாறை எப்படி உபயோகப்படுத்துவது என தெரியுமா?

nathan

பரு ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம் வருகிறது? இதையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா?

nathan

முகத்தில் உள்ள முகப்பரு தழும்புகளை மறைக்க உதவும் சில பாட்டி வைத்தியங்கள்!

nathan

முகப்பருவை போக்கும் துளசி ஃபேஸ் பேக்

nathan

ஏழே நாட்களில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள்!

nathan

முகப்பருக்களை போக்கும் வேப்பிலை

nathan