இப்போது வருவது விழாக்காலம். தீபாவளி, வருடப் பிறப்பு ,பொங்கல் என அடுத்தடுத்த மாதங்களில் விசேஷங்களுக்கு குறைவிருக்காது. இந்த சமயங்களில் குளிர்காலம் அதிகமாக இருப்பதால் சருமம் வறட்சியோடும் பொலிவின்றியும் இருக்கும்.
இந்த மாதிரியான சமயங்களில் உங்கள் முகத்திற்கு ஜொலிக்கும் அழகை தர இந்த சீக்ரெட் குறிப்புகளை பயன்படுத்துங்கள்.
தங்க நாணய ஸ்ப்ரே :
இது முகலாய அரசிகள் பயன்படுத்தும் அழகுக் குறிப்பாகும்.
தங்க நாணயம் 2 எடுத்துக் கொள்ளுங்கள். இதனை 100 மி.லி. நீரில் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
பின்னர் ஆறியதும் அதனை வடிகட்டி அந்த நீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் இரு வேளை இந்த நீரால் உங்கள் சருமத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். முகம் ஜொலிப்பதை உணர்வீர்கள். உங்களிடம் தங்க நாணயம் இல்லையென்றால் வெள்ளி நாணயம் கொண்டும் இவ்வாறு செய்யலாம்.
நட் ஃபேஸ் பேக் :
தேவையானவை :
குங்குமப் பூ – அரை ஸ்பூன்
பாதாம் – 10
பிஸ்தா – 5
பால் – 4 ஸ்பூன்
சந்தனப் பொடி 1 ஸ்பூன்
செய்முறை :
குங்குமப் பூவை பாலில் ஊற வையுங்கள். பாதாம் பிஸ்தாவை சிறிது பால் சேர்த்து அரைத்து அதனுடன் இந்த குங்குமப் பூ பாலை கலந்து அதில் சந்தனப்பொடியையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் உடனடியாக பளபளப்பதை பார்ப்பீர்கள். விசேஷங்களுக்கு முன் இவ்வாறு செய்து கொண்டு போனால் ஃபேஸியல் தேவையில்லை.
செம்பருத்தி மற்றும் ரோஜா இதழ்கள் :
செம்பருத்தி இதழ் மற்றும் ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவவும். இதனால் சுருக்கம் மற்றும் தளர்வான சருமம் மறைந்து இளமையாக ஜொலிக்கும்.
கூந்தல் மாஸ்க் :
உங்கள் கூந்தல் மினுமினுப்பாக இருந்தால் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கிறது என அர்த்தம். இங்கே சொல்லப்பட்டுள்ள ஹெர்பல் மாஸ்க் உபயோகித்து பாருங்கள். பிறகு சொல்வீர்கள்.
தேவையானவை :
நெல்லிக்காய் பொடி – 2 ஸ்பூன்
வெந்தயப் பொடி – 2 ஸ்பூன்
சீகைகாய் பொடி – 2ஸ்பூன்
திரிபலா பொடி – 2 ஸ்பூன்
செய்முறை :
மேலே சொன்ன எல்லா பொடிகளையும் கலந்து ஒரு முட்டையுடன் கலந்து கொள்லுங்கள். இதில் யோகார்ட் அல்லது தயிர் சேர்க்கவும்.
இந்த கலவையை தலையில் தேய்க்கவும். 45 நிமிடங்களுக்கு பிறகு தலையை அலசவும். இந்த சிகிச்சையை வாரம் ஒருமுறை செய்தால் நல்ல பலன் காண்பீர்கள்.
பூக்கள் மாஸ்க் ;
இதை உங்கள் கூந்தலுக்கு முயற்சித்து பாருங்கள். அற்புத பலன்கலை கண்டு நீங்களே வியப்பீர்கள்.
சாமந்தி இதழ் – 1 கப்
செம்பருத்தி இதழ் – 1 கப்
ரோஜா இதழ் – அரை கப்
செய்முறை :
மேலே சொன்ன இதழ்களையெல்லாம் அரைத்து தலையில் தேயுங்கள். அரை மணி நேரம் கழித்து மைல்ட் ஷாம்பு போட்டு குளிக்கவும். உங்கல் கூந்தல் பட்டு போல் மிருதுவாகும்.