26.7 C
Chennai
Saturday, Feb 22, 2025
Lemon Fish 1 10533
அசைவ வகைகள்

லெமன் ஃபிஷ் ஃப்ரை… இதுவரை மீனை இப்படி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க..!

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘லெமன் ஃபிஷ் ஃப்ரை’ அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியரான ஜெயலஷ்மி.

தேவையானவை:

மீன் துண்டுகள் – அரை கிலோ
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் – 50 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

மீனை ஊற வைப்பதற்கு:

எலுமிச்சைச் சாறு – அரை டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

செய்முறை:

மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து அதிலிருக்கும் நீரை வைத்துக்கொள்ளவும். மீனை ஊற வைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கலந்து அதனுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து நன்கு பிரட்டி 15 நிமிடங்கள் ஊறவிடவும்.

அடுப்பில் அடிகனமான பரந்த பேனை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்றாக வதக்கவும். அதனுடன் மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிவிட்டு, கலவையை பேனில் சமமாக பரப்பி அதன் மேல் மீன் துண்டுகளை வைத்து சிறு தீயில் வேக விடவும். மீன் ஒரு புறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேக விட்டு இறக்கவும். மீனுடன் மசாலாக் கலவையும் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.

லெமன் ஃபிஷ் ஃப்ரை, சாதத்துடன் சாப்பிட சுவையான சைடு டிஷ்.Lemon Fish 1 10533

Related posts

சுவையான சில்லி சிக்கன் செய்வது எப்படி | How To Make Chilli Chicken Recipe

nathan

ஸ்பெஷல் கோங்கூரா சிக்கன்

nathan

அவரைக்காய் முட்டை பொரியல் செய்வது எப்படி?

nathan

எவ்வாறு சுவையான சிக்கன் பிரியாணி தயாரிப்பது.

nathan

சுவையான பிராந்தி சிக்கன் ரெசிபி

nathan

சால மீன் குழம்பு செய்வது எப்படி?

nathan

மிளகு சிக்கன் குழம்பு

nathan

இறால் பெப்பர் ப்ரை (prawn pepper fry)

nathan

ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா

nathan