29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
19 1476851048 1 damagesskinsnaturalbeauty
சரும பராமரிப்பு

சருமத்தில் உள்ள முதுமைப் புள்ளிகளை நீக்க வேண்டுமா? இதோ ஓர் எளிய வழி!

வயது அதிகரிக்கும் போது சருமத்தில் கருமையான தழும்புகள் போன்று புள்ளிகள் ஏற்படும். இந்த புள்ளிகள் தான் முதுமைப் புள்ளிகள். இவை கைகள், முகம், தோள்பட்டை போன்ற இடங்களில் பொதுவாக தோன்றும். அதுமட்டுமின்றி சூரியக்கதிர்கள் படும் இடத்திலும் இம்மாதிரியான புள்ளிகள் தோன்றும்.

பொதுவாக இந்த மாதிரியான முதுமைப் புள்ளிகள் 50 வயதிற்கு மேல் தான் தோன்றும். ஆனால் இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினருக்கு, அதுவும் வெயிலில் அதிகம் சுற்றுபவர்களுக்கு முதுமைப் புள்ளிகள் விரைவில் வருகின்றன. இதனால் இளமையிலேயே நிறைய பேர் வயதானவர்கள் போன்று காட்சியளிக்கின்றனர்.

இங்கு சருமத்தில் உள்ள முதுமைப் புள்ளிகளைப் போக்கும் ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றினால் நிச்சயம் முதுமைப் புள்ளிகளைப் போக்கலாம்.

எளிய தீர்வு சருமத்தில் இருக்கும் முதுமைப் புள்ளிகளைப் போக்க எத்தனையோ செயற்கை வழிகள் இருந்தாலும், இயற்கை வழி போன்று நிரந்தர தீர்வை வழங்க முடியாது. அதுவும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தீர்வை டல்லாஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பின்பற்றியதில், அற்புத தீர்வு கிடைத்துள்ளதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

இப்போது அந்த இயற்கை வழிக்கு தேவையான பொருட்கள் என்னவென்றும், எப்படி பயன்படுத்த வேண்டுமென்றும் காண்போம்.

தேவையான பொருட்கள்: வெங்காய சாறு ஆப்பிள் சீடர் வினிகர்

தயாரிக்கும் முறை: வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதனை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, முதுமைப் புள்ளிகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.

வெங்காயத்தின் நன்மை வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ ராடிக்கல்களின் செயல்பாட்டை நடுநிலையாக்கி, சரும செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றி, புறத்தோலின் அடிப்பகுதியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

19 1476851048 1 damagesskinsnaturalbeauty

Related posts

ஃபிஷ் ஸ்பா அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும்

nathan

வெயிலோ குளிரோ மழையோ

nathan

தேனின் உதவியுடன் எப்படி பேசியல் பண்ணி கொள்ளுவது

nathan

ஒரே வாரத்தில் கறுப்பழகு’- இப்படி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

nathan

உப்பைக் கொண்டு கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி?

nathan

நிரந்தமான முடியை நீக்க வேக்சிங் செய்வதே சிறந்தது

nathan

பேக்கிங் சோடா கொண்டு கரும்புள்ளிகளைப் போக்குவது எப்படி?

nathan

அக்குள் கருமையை போக்கும் அரிசி ஸ்கரப்

nathan

அழகாக இருப்பதற்கான 6 ரகசியங்கள்!

nathan